கால் பராமரிப்புப் பிரிவு புதுதில்லியில் உள்ள பண்டிட் தீனதயாள் உபாத்யாயா தேசிய மாற்றுத் திறனாளிகள் நிறுவனத்தின் புரோஸ்தெடிக்ஸ் மற்றும் ஆர்த்தோடிக்ஸ் துறை சார்பில் கால் பராமரிப்புப் பிரிவு (Foot Care Unit) திறக்கப்பட்டுள்ளது. இப்பிரிவானது மிகவும் மேம்பட்ட கால் பராமரிப்பு மேலாண்மை அமைப்பாகும், குறிப்பாக நீரிழிவு நோய் தொடர்பான கால் மேலாண்மையில் இந்தப் பிரிவு சிறந்து விளங்கி வருதிறது. இந்தியாவில் அல்ட்ரா மோடம் கால் பராமரிப்புப் பிரிவைக் (Ultra Modem Foot Care Unit) கொண்ட ஒரே தேசிய நிறுவனம் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா தேசிய மாற்றுத் திறனாளிகள் நிறுவனம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்