ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஒய்வூதியர்களுக்கான நேர்காணல் ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெறும். ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் தங்களின் வாழ்நாள் சான்றினை கீழ்கண்ட ஏதேனும் ஒரு வழிமுறையில் வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு நேரில் வருவதன் மூலமாக இந்திய அஞ்சல் துறை வங்கி (IPPB) சேவை மூலமாக இ-சேவை மையம் (e-seva centre) மற்றும் பொது சேவை மையங்கள் வழியாக ஜீவன் பிரமான் முகம் செயலியினை (Face App) பயன்படுத்தி ஆண்டு வாழ்நாள் சான்றினை பதிவு செய்யலாம் ஓய்வூதியர்கள் சங்கங்கள் நடத்தும் முகாம்களில் கலந்து கொண்டு ஜீவன் பிரமான் மூலம் மின்னணு வாழ்நாள் சான்றிதழினை பதிவு செய்யலாம். வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9