இந்திய முதியோர் தொகை ஒப்பிட்டு நோக்கும் போது இந்தியா இளம் மக்கள் தொகையைக் கொண்டது. இருப்பினும் பெரும் அளவில் முதியோர்களைக் கொண்ட உலகின் இரண்டாவது நாடாக இன்னும் விளங்குகிறது. 2013 ஆம் ஆண்டு 10 கோடியாக இருந்த இந்தியாவின் முதியோர் தொகை 2030 ஆம் ஆண்டு 19.8 கோடியாக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய முதியோர் தொகையின் தனித்துவமான அம்சங்கள்: பெரும்பாலான முதியோர் (80%) கிராமப் புறங்களில் வசிப்பதால் சேவைகள் அளிப்பது சவாலாக உள்ளது முதியோர் மக்கள் தொகையில் பெண்களே அதிகம் (51%) இவர்களுள் 80 வயதுக்கு மேலுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது முதியோரில் கணிசமானோர் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளனர் (30%) தரமான சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு தேவைப்படும் பரவா நோய்கள் முதியோர் தொகையினரில் அதிக அளவில் பரவலாகக் காணப்படுகின்றன. இதற்கும் சமூக-பொருளியில் நிலைக்கும் தொடர்பு இல்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்தப் பரவா நோய்கள் மூலம் ஏற்படும் ஊனம் முதியோரைத் தாக்கி அவர்களை அன்றாட செயல்பாடுகளைக் கூட செய்யத் திராணியற்றவர்கள் ஆக்குகின்றன. இந்த நீடித்த நோய்களின் சிகிச்சைக்குத் தேவைப்படும், குறிப்பாக மூட்டு மாற்று, இதய அறுவை, நரம்பு அறுவை போன்ற, சிகிச்சைகளை அதிக செலவிலேயே செய்ய முடியும். முதியோர் நல பராமரிப்பு தேசிய திட்டம் ஓய்வுக்குப் பின், சார்ந்து வாழும் நிலையில் இருக்கும் முதிய பெண்களுக்கு இந்த சக்திக்கு மீறிய செலவுகளை மேற்கொள்ள இயலாது. ஆகவே, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் முதியோர் நல பராமரிப்பு தேசிய திட்டத்தை [National Programme for Health Care of the Elderly (NPHCE)] தொடங்கி உள்ளது. இது முதியோர் தம் தேவைகளை சந்திக்கும் அர்ப்பணிப்போடு தொடங்கப்பட்டுள்ள விரிவான முயற்சி. தடுப்பு, குணப்படுத்தல் மற்றும் மறுவாழ்வு அம்சங்களை உள்ளடக்கியது. திட்டத்தின் குறிக்கோள் எளிதில் அணுகக் கூடிய, மலிவான, தரமான, நீண்டகால, விரிந்த மற்றும் அர்ப்பணிப்போடு கூடிய சேவையை முதியோருக்கு வழங்குதல் முதுமை அடைதலுக்கு ஒரு புதிய தோற்ற அமைப்பை அளித்தல் அனைத்து வயதினருக்குமான சமுதாய சூழலை உருவாக்க ஒரு கட்டமைப்பைக் கட்டுதல் சுறுசுறுப்பான சுகாதாரமான முதுமை அடைதல் எனும் கருத்துருவை ஊக்குவித்தல் திட்டத்தின் தனித்துவமான நோக்கம் சமுதாய அடிப்படையிலான ஆரம்ப சுகாதார அணுகுமுறையுடனான தடுப்பு, குணப்படுத்தல் மற்றும் மறுவாழ்வு சேவைகளை எளிதாக அணுக வழி வகுத்தல் வலிமையான பரிந்துரைப்பு பின்புலத்துடன் கூடிய சமுதாயத்தில் முதியோரின் சுகாதாரப் பிரச்சனைகளை இனம் கண்டு தகுந்த சுகாதார சிகிச்சைகள் அளித்தல் மருத்துவ மற்றும் மருத்துவம் சார் வல்லுநர்களின் திறனை மேம்படுத்துவதோடு குடும்பத்துக்குள் பராமரிப்பாளர்களை உருவாக்கி முதியோர் நலம் பேணுதல் மாவட்ட மருத்துவமனைகள், வட்டார மருத்துவ நிறுவனங்கள் மூலம் முதியோருக்கு பரிந்துரைப்பு சேவைகள் வழங்கல் தேசிய கிராம சுகாதாரத் திட்டம், ஆயுஷ் மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் போன்ற சார் துறைகளோடு இணைந்து செயல்படுதல் முக்கிய உத்திகள் திட்டத்தின் நோக்கத்தை அடைய கடைபிடிக்கப்படும் முக்கிய உத்திகள்: பயிற்சி பெற்ற சுகாதார பராமரிப்பு பணியாளர்கள் வீடுகளுக்கு சென்று பராமரிப்பு அளித்தலை உள்ளடக்கிய சமுதாய அடிப்படையிலான ஆரம்ப சுகாதார பராமரிப்பு அணுகுமுறை இயந்திரங்கள், கருவிகள், பயிற்சி, கூடுதல் மனித வளம், தகவல், கல்வி தொடர்பு ஆகியவற்றை வழங்குதல் உட்பட அர்ப்பணிப்பு மிக்க சேவைகளை ஆரம்ப மற்றும் சமுதாய சுகாதார மையங்களில் வழங்குதல் 10 படுக்கைகள் கொண்ட அறைகள், கூடுதல் மனித வளம், இயந்திரம் மற்றும் கருவிகள், நுகர்பொருள் மற்றும் மருந்துகள், பயிற்சி மற்றும் தகவல் கல்வி தொடர்பு ஆகியவைகளை உள்ளடக்கிய அர்ப்பணிப்பான சேவைகளை மாவட்ட மருத்துவமனைகளில் வழங்குதல் அர்ப்பணிப்புடனான மூன்றாம் கட்ட மருத்துவ வசதிகளை முதியோருக்கு வழங்க முதியோர் மருத்துவத்தில் முதுநிலை படிப்பை அறிமுகப்படுத்தல் மற்றும் அனைத்து மட்டங்களிலும் உட்சேவை சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல் ஆகியவற்றின் மூலம் 8 வட்டார மருத்துவ நிறுவனங்களை வலுப்படுத்தல் பொது ஊடகம், நாட்டுப்புற ஊடகம் மற்றும் பிற தொடர்பு வழிமுறைகளைப் பயன்படுத்தி தகவல் கல்வி தொடர்பு மூலம் முதியோர் சமுதாயத்தை அடைதல் சுதந்திரமாக திட்டத்தை மதிப்பிடல், முதியோர் இயலில் ஆராய்ச்சிகள், முதியோர் நல பராமரிப்பு தேசிய திட்டத்தை நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணித்தல் கூடுதல் உத்திகள் முதியோர் சுகாதார பராமரிப்பில் பொதுத் துறை மற்றும் தனியார் கூட்டு பங்கேற்பை ஊக்கப்படுத்துதல் ஆயுஷை (AYUSH) முதன்மைப்படுத்துதல் - அவ்வப்பகுதி சுகாதார மரபுகளுக்கு புத்துயிரூட்டுதல் மற்றும் முதியோர் மருத்துவத் துறையில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் திட்டங்களில் இணைதல் முதியோர் மருத்துவ பிரச்சனைகளில் உதவும் வண்ணம் மருத்துவக் கல்வியை தகவமைத்தல் ஆதாரம்: நேஷனல் ஹெல்த் போர்ட்டல்