ஓய்வூதியதாரர் வழங்கப்படும் சான்றிதழ்கள்

ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆண்டிற்கு ஒரு முறை அதாவது ஜூலை மாதம் அவரவர்கள் ஓய்வூதியம் பெறும் ஐ.ஓ.பி அதிகாரிகளிடம் சென்று தங்களது ஆயுள் சான்றிதழைக் கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரியிடம் சென்று வேலையில்லா சான்றிதழ் / வேலை செய்யும் சான்றிதழை வரையறுக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து வங்கியிடமும் மற்றும் வாரிய அலுவலக தணிக்கைப் பிரிவிடமும் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. (வாரிய ஆணை எண் 17, நாள் 13.01.1995).

மற்றும் மறுநியமன வேலை செய்யும் போது சம்பளம் ஒய்வூதியத்தை விட அதிகமாக இருக்கக் கூடாது. இதற்கு அகவிலைப்படி, சம்பள உயர்வு போன்றவைகள் மறுநியமனத்தில் இல்லை. வேலை இல்லா சான்றிதழ் தரவில்லை என்றால் வேலை செய்யும் குறிப்புகள் குறிப்பிட வேண்டும். (குறிப்பாணை எண் வாரிய தணிக்கைப் பிரிவு / ஓய்வூதியம்)

குடும்ப ஓய்வூதியதாரர்கள் மறுமணம் செய்துக் கொண்டாலும், திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் ஆறு மாதத்திற்குள் அதாவது மே, மற்றும் நவம்பர் மாதங்களில் அதற்குரிய சான்றிதழ்களை தர வேண்டும்.

சிறுவர்/ சிறுமியர் குடும்ப ஓய்வூதியம் பெறும் போது அவர்களது பாதுகாவலர்கள் ஒவ்வொரு மாதமும் வங்கியிடம் பணியில் இல்லை என்றும் மற்றும் திருமணம் ஆகவில்லை என்றும் தெரிவிக்க வேண்டும் (கடித எண் 79504/எண் 1/ 94-1, நாள் 07.01.1995).

குடும்ப ஓய்வூதியத்தை பாதுகாவலர்களின் பொறுப்பில் பெறும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் / ஊனமுற்றவர்கள் தலைமை மருத்துவரிடம் மூன்று வருடத்திற்கு ஒரு முறை ஊனமுற்றவர் / குறையுள்ளவர் என்று சான்றிதழ் பெற்றுத் தர வேண்டும்.

ஆதாரம்: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்