தமிழ்நாடு அரசு, சமூகத்தில் உள்ள ஏழை, எளியவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நோக்கத்தில் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மேற்படி சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களின் கீழ், பயனாளிகளுக்கு மாத ஓய்வூதியமாக ரூ. 1000 வழங்கப்பட்டு வந்தது. இந்த ஓய்வூதியத்தை ரூ. 1200 ஆக உயர்த்தி வழங்குவது தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 22.07.2023 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கீழ்க்கண்ட சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் காத்திருப்புப் பட்டியலிலுள்ள 68,607 நபர்கள் (உழவர் பாதுகாப்புத் திட்டம் நீங்கலாக) மற்றும் ஏற்கெனவே பயன்பெற்று வரும் பயனாளிகளின் மாத ஓய்வூதியத்தை (மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம் தவிர) ரூ. 1000-லிருந்து ரூ. 1200-ஆக ஆகஸ்ட் 2023 முதல் உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது: வ. எண். திட்டங்களின் பெயர் 1 இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம் 2 இந்திராகாந்தி விதவையர் ஓய்வூதிய தேசியத் திட்டம் 3 ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டம் 4 ஆதரவற்ற / கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம் 5 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம் 6 இலங்கை அகதிகளுக்கான (முதியோர், ஆதரவற்ற விதவைகள், ஆதரவற்ற கணவரால் கைவிடப்பட்ட பெண்கள்) ஓய்வூதியத் திட்டம் அரசு முதன்மைச் செயலாளர்சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9