முத்ரா வங்கி திட்டம்

சிறு மற்றும் குறு தொழில் முனைவர்களுக்கு கடனுதவி அளிக்கும் Micro Units Developement and Refinancing Agency என்பதன் சுருக்கமே முத்ரா ஆகும். இவ்வங்கி சிறு தொழில் முனைவோருக்கு ரூ. 10 லட்சம் வரையிலான கடன்களை எளிதில் பெற வசதி செய்யும்.

பெரிய தொழில் நிறுவனங்களே அதிக எண்ணிக்கையிலான வேலைகளை அளிக்கின்றன என்பது பொதுவான நம்பிக்கை. மாறாக, இந்தியாவில் பெரிய நிறுவனங்கள் 12.5 மில்லியன் நபர்களுக்கு வேலை அளிக்கையில், சிறு மற்றும் குறு நிறுவனங்கள் 120 மில்லியன் நபர்களுக்கு வேலை அளிக்கின்றன.

அரசு நிறுவனங்கள் தொகுத்த தரவுகளின்படி 57.7 மில்லியன் நபர்கள், கிட்டத்தட்ட ரூ. 11 லட்சம் கோடி முதலீட்டில் சிறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். அதாவது சராசரியாகக் கணக்கிட்டால் ஒரு சிறு தொழில் அமைப்புக்கு ரூ. 17000 மட்டுமே மூலதனம். எனவே சிறு தொழில் முனைவோரின் மூலதன சிரமங்களை அகற்றி, அவர்கள் சாதனை படைக்க உதவி புரியவே முத்ரா வங்கி தொடங்கப்பட்டிருக்கிறது.

முத்ரா வங்கிக்கென 2015 மத்திய பட்ஜெட்டில் ரூ. 20000 கோடியும், அடுத்ததாக கடன் உத்தரவாத நிதியாக ரூ. 3000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதான அம்சங்கள்

சிறு/குறு தொழில் நிறுவனங்களின் நிதி அமைப்புகளுக்கான வரையறைகள் உருவாக்குவது

சிறு/குறு நிதி அமைப்புகளுக்கான பதிவை மேற்கொள்ளுதல்

சிறு/குறு நிதி அமைப்புகளை வரன்முறைப்படுத்துதல்

சிறு/குறு நிதி அமைப்புகளுக்கான அங்கீகாரம்/தர நிர்ணயம் செய்தல்

கடனுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பதை தடுக்கவும், வாடிக்கையாளர்கள் பாதுகாப்புக்கு பொருத்தமான கொள்கைகள் வகுக்கவும் கடனிலிருந்து மீளவும் ஒரு அமைப்பை உருவாக்குதல்.

அனைத்து சிறு/குறு தொழில் நிறுவனங்களுக்கும் ஒப்பந்ததத்துடன் கூடிய கடன்கள் அளிப்பது

கடன்களுக்கு சரியான தொழில்நுட்ப தீர்வுகளை பரிந்துரைத்தல்

பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் குறு தொழில் நிறுவனங்கள் கடன் பெறுவதற்கான வழிவகைகளைக் கட்டமைப்பது