இலவச 108 ஆம்புலன்சு

தமிழக அரசு இலவச 108 ஆம்புலன்சு சேவையை நடத்தி வருகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்று வருகிறார்கள். 108 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு போன் செய்து இந்த இலவச ஆம்புலன்சு சேவையை பெறலாம்.

இப்போது இலவசமாக மருத்துவ ஆலோசனை பெறும் புதிய சேவை மூலம் 104 என்ற எண்ணுக்கு கட்டணமின்றி போன் செய்து இலவச மருத்துவ ஆலோசனைகளை பெறலாம்.

பொதுமக்கள் முதலுதவி குறித்த தகவல்கள், மருத்துவ ஆலோசனைகள், தாய்சேய் நலம் பற்றிய தகவல்கள், ரத்த தானம், கண்தானம் பற்றிய தகவல்கள், தொற்று மற்றும் தொற்றாநோய்கள் பற்றிய தகவல்கள், ஊட்டச்சத்து குறித்த தகவல்கள், முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள வசதிகள் ஆகியவற்றுக்கான ஆலோசனைகளை இனி இலவசமாக பெறலாம்.

குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் நிலையங்கள் பற்றிய தகவல்கள், மனநல ஆலோசனைகள், எச்.ஐ.வி., பால்வினை நோய்கள் பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களையும் கேட்டு தெளிவு பெற முடியும்.

24 மணி நேர தொலைபேசி ‘104’ மருத்துவ சேவை

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் முக்கியமான திட்டங்களை முன்னின்று நிறைவேற்றுவதிலும், டாக்டர் முத்து லட்சுமி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் பெண்கள், குழந்தைகள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் பற்றிய விவரங்களை கணினி மூலம் தினந்தோறும் பதிவு செய்வதற்காக கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஏற்படும் காலவிரயத்தினை குறைத்திடும் வகையிலும், அவர்கள் பணி மேம்பாடு அடையும் வகையிலும் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.

ஆதாரம்: இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, சென்னை