முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகளின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 7.5.2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண். 110-ன் கீழ் அறிவிப்பினை வெளியிட்டார்கள். இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் பொருட்டு மாநகராட்சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1545 அரசு தொடக்கப் பள்ளிகளில் (1 முதல் 5ஆம் வகுப்பு வரை) பயிலும் 114095 தொடக்கப் பள்ளி மாணவ மாணவியருக்கு முதற்கட்டமாகக் காலை உணவு வழங்கும் திட்டம் ரூ. 33.56 கோடி செலவினத்தில் தொடங்கப்படும். வழிகாட்டு நெறிமுறைகள் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் நோக்கம், சிற்றுண்டியின் வகைகள், பொதுவான நடைமுறைகள், கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு ஆகியவற்றை உள்ளடக்கிய பொதுவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. குறிக்கோள்கள் மாணவ / மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்தல் மாணவ / மாணவியர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தலை உறுதி செய்தல் மாணவ / மாணவியரின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், குறிப்பாக இரத்த சோகை குறைபாட்டினை நீக்குதல் பள்ளிகளில் மாணவ / மாணவியர்களின் வருகையை அதிகரித்தல் / தக்க வைத்துக் கொள்ளுதல் வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் காலை உணவு வகைகள் பின்வரும் பல்வேறு விதமான சிற்றுண்டி வகைகளில் ஏதேனும் ஒன்றை குறிப்பிட்டுள்ள நாட்களில் வழங்க வேண்டும். திங்கட்கிழமைஉப்புமா வகை செவ்வாய்கிழமைகிச்சடி வகை புதன்கிழமைபொங்கல் வகை வியாழக்கிழமைஉப்புமா வகை வெள்ளிக்கிழமைகிச்சடியுடன் இனிப்பு ரவா உப்புமா + காய்கறி சாம்பார் ரவா காய்கறி கிச்சடி ரவா பொங்கல் + காய்கறி சாம்பார் சேமியா உப்புமா + காய்கறி சாம்பார் ஏதாவது ஒரு கிச்சடி வகையுடன்(செவ்வாய்கிழமை உணவு வகையின்படி) சேமியா உப்புமா + காய்கறி சாம்பார் சேமியா காய்கறி கிச்சடி வெண்பொங்கல் + காய்கறி சாம்பார் அரிசி உப்புமா + காய்கறி சாம்பார் ரவா கேசரி அரிசி உப்புமா + காய்கறி சாம்பார் சோள காய்கறி கிச்சடி ரவா உப்புமா + காய்கறி சாம்பார் சேமியா கேசரி கோதுமை ரவா உப்புமா +காய்கறி சாம்பார் கோதுமை ரவா காய்கறி கிச்சடி கோதுமை ரவா உப்புமா +காய்கறி சாம்பார் ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப் பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி / ரவை / கோதுமை ரவை / சேமியா / உள்ளூரில் அந்தந்த இடங்களில் விளையும் சிறுதானியங்கள் / மற்றும் சாம்பாருக்கான பருப்பு 15 கிராம் மற்றும் உள்ளூரில் கிடைக்கக் கூடிய காய்கறிகள் (சமைத்த பின் 150 - 200 கிராம் உணவு மற்றும் 60 மி.கி. காய்கறியுடன் கூடிய சாம்பார்). ஒரு வாரத்தில் குறைந்தது 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக் கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவை வழங்கலாம். பொதுவான வழிமுறைகள் காலை உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் தரம் FSSAI நெறிமுறைகளுக்கு உகந்தவாறு இருக்க வேண்டும். நகரப்புறப் பகுதிகளில், உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் மையப்படுத்தப்பட்ட சமையலறை அல்லது வேறு ஏதேனும் தகுதி வாய்ந்த அமைப்பின் மூலம் தரமான காலை உணவு வழங்குதலை உறுதிப்படுத்த வேண்டும். ஊரக பகுதிகளில் கிராம ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பின் மூலம் தரமான காலை உணவு வழங்குதலை உறுதிப்படுத்த வேண்டும். காலை உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் இயல்பான நிறம், மணம் உடையதாகவும், வேறு வெளிப் பொருட்கள் (extraneous substance) கலக்காமலும் சுத்தமாக இருக்க வேண்டும். உள்ளூரில் சமைக்கப் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஒரு முறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயைக் கண்டிப்பாக மீண்டும் பயன்படுத்தக் கூடாது. உணவு சமைக்கப் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்கள் தரமானதாகவும், சுத்தமானதாகவும் இருக்க வேண்டும். காய்கறிகளின் தரத்தை உறுதி செய்வதுடன் அவற்றை சமைப்பதற்கு முன் தண்ணீரில் நன்கு கழுவி பயன்படுத்தப்பட வேண்டும். தயார் செய்யப்பட்ட உணவினை குழந்தைகளுக்கு வழங்கும் முன்பு பள்ளி மேலாண்மைக் குழு ஒவ்வொரு நாளும் தரத்தினை உறுதி செய்யும் பொருட்டு உணவினை ருசி பார்த்தல் வேண்டும். உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் அவ்வப்போது பள்ளிகளை ஆய்வு செய்து உணவின் தரத்தினை உறுதி செய்ய வேண்டும். உணவு தயாரிக்கப்படும் இடத்தைத் தேர்வு செய்து, அந்த குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே உணவு தயாரிக்கப்பட வேண்டும். உணவு தயாரித்தல் மற்றும் விநியோகிக்கும் பணிகளில் ஈடுபடும் சமையலர் மற்றும் உதவியாளர்கள் தன் சுத்தத்தைப் பராமரித்தல் வேண்டும். கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு கண்காணிப்புக் குழுக்கள் காலை உணவு வழங்கும் திட்டத்தினை திறம்பட செயல்படுத்துவதற்குக் கீழ்கண்ட துறை அலுவலர்களை கொண்ட மாநில, மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை ஊரக வளர்ச்சி நகர்ப்புற நிர்வாகம் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் பள்ளிக் கல்வி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் உணவுப் பாதுகாப்பு மதிப்பீடு திட்டம் செம்மையாக செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை மதிப்பீடு செய்ய ஏதுவாக அடிப்படை மற்றும் இறுதி நிலை ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையினால் தகுதி வாய்ந்த வெளி முகமை நிறுவனங்களின் வாயிலாக இப்பணிகள் மேற்கொள்ளப்படும். ஆதாரம்: தமிழ்நாடு அரசு