நோக்கம்

ஊரக உட்கட்டமைப்பின் ஒரு பகுதியான ஊரக சாலை இணைப்பில் தற்போதுள்ள இடைவெளியினை குறைப்பதும் மற்றும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் உருவாக்கப்படும் சொத்துக்களை நிலைப்படுத்தி நிலையான சொத்துக்களை உருவாக்குவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

செயலாக்கம்

இத்திட்டம், கிராம ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் செயல்படுத்தப்படும்.

நிதி ஒதுக்கீடு

இத்திட்டம் 100 விழுக்காடு மாநில அரசு நிதியைக் கொண்டு செயல்படுத்தப்படும்.

2014 - 15 ஆம் ஆண்டிற்கு இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ. 250 கோடி ஆகும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பின் வரும் பணிகளை மேற்கொள்ளலாம்:

நீர் நிலைகளில் கருங்கல் பதித்தல்

தடுப்புச் சுவர் கட்டுதல்

படித்துறைகள் அமைத்தல்

நீர் வரத்து / உபரி கால்வாய் கட்டமைப்பு

மண் சாலைகள் மற்றும் சரளைக்கல் சாலைகளை தார்ச்சாலைகளாக மேம்படுத்துதல்

அனைத்து பருவ காலங்களுக்கும் ஏற்ற வகையில் சாலைகள் அமைத்தல்

திட்ட செயல்பாடு

பணிகளை தேர்வு செய்யும் பொறுப்பு, கிராம ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சித் தலைவர், இப்பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்குவார்.

இப்பணிகள் யாவும் தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டம் 1998-ன் படி ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

திட்டத்தில் பயன்பெற மற்றும் திட்டத்தைப் பற்றிய இதர விவரங்களை பெற அணுக வேண்டிய அலுவலர்கள்:

மாநில அளவில்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர், சென்னை-15

மாவட்ட அளவில்: மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை

வட்டார அளவில்: வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ/கி.ஊ)

ஆதாரம்: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்