கிராமப்புற மாற்றத்திற்கான கடைநிலைக் களச் சிற்பிகள் பயிற்சி பெற்ற களப்பணியாளர்களின் கட்டமைப்பு, பரவலாக்கப்பட்ட சேவை வழங்கலின் முதுகெலும்பாக விளங்குகிறது. இந்தப் பணியாளர்கள் அரசுத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குப் பங்களிப்பதுடன், கிராம அளவில் உரிய நேரத்தில் உதவிகளையும் வழங்குகிறார்கள். நாடு முழுவதும், 9 லட்சத்திற்கும் மேற்பட்ட சமூக வள பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் போன்றவர்களும் பிற களப்பணியாளர்களும் இணைந்து, அரசு நிறுவனங்களுக்கும் கிராமப்புறக் குடும்பங்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து வருகின்றனர். இந்த 9 லட்சம் சமூக வள பணியாளர்களில், ஏறக்குறைய 4.08 லட்சம் பேர் வாழ்வாதார சமூக வள நபர்களாக உள்ளனர். இவர்கள் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மீன்வளம், வனப் பொருட்கள், தொழில் மேம்பாடு ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கின்றனர். மற்ற சமூக வள நபர்கள் பாலின விழிப்புணர்வு, நிதி சார்ந்த கல்வியறிவு, சமூக மேம்பாடு போன்ற துறைகளிலும் தங்கள் சேவைகளை விரிவுபடுத்துகின்றனர். மேலும், சுகாதாரம், ஊட்டச்சத்துத் துறையில், 10.40 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆஷா பணியாளர்களும் 10.58 லட்சம் பயிற்சி பெற்ற அங்கன்வாடிப் பணியாளர்களும் சமூக சுகாதாரப் பராமரிப்பையும் குழந்தைப்பருவ சேவைகளையும் வலுப்படுத்தி வருகின்றனர். பல்வேறு துறைகளில், இந்தக் களப்பணியாளர்கள் ஒருங்கிணைப்பைச் சாத்தியமாக்கி, உள்ளூர் நிறுவனங்களை வலுப்படுத்துகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக, அரசு பல்வேறு திட்டங்கள் மூலம் வாழ்வாதாரம், சுகாதாரம், ஊட்டச்சத்து, சுகாதாரம், குடிநீர், வீட்டுவசதி, நிதி உள்ளடக்கம், வேலைவாய்ப்பு போன்ற பல துறைகளில் கிராமப்புற மேம்பாட்டிற்காக கணிசமான முதலீடுகளைச் செய்துள்ளது. இவற்றில் கடைநிலைச் சேவைகளை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றும் அர்ப்பணிப்புள்ள களப்பணியாளர்களின் பணி முக்கியமானதாகும். இந்த கட்டமைப்பில், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்துத் துறைகளில் 10.40 லட்சத்திற்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்களான ஆஷா பணியாளர்கள், 10.58 லட்சம் அங்கன்வாடிப் பணியாளர்கள், துணை செவிலியர்கள், மகப்பேறு உதவியாளர்கள் ஆகயோர் அடங்குவர். விழிப்புணர்வு ஏற்படுத்துதல், திறன் மேம்பாடு, சேவை ஆதரவு, மேம்படுத்தப்பட்ட அணுகல் ஆகியவற்றின் மூலம், இந்த உள்ளூர் களப்பணியாளர்கள் நிறுவனங்களுக்கும் சமூகங்களுக்கும் இடையிலான இணைப்பை வலுப்படுத்துகின்றனர் . இந்த இணைப்பு, சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்தவும், திட்டச் செயலாக்கத்தை விரிவுபடுத்தவும் உதவுகிறது. வணிகத் தொடர்பாளர்கள், வங்கி ஷகி என்பவர்கள், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் பயிற்சி பெற்ற பெண் சமூகப் பணியாளர்கள் ஆவர். 1.48 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தப் பணியாளர்கள், கிராமங்களில் வங்கிக் கணக்குத் தொடங்குதல், வைப்புத்தொகை, பணம் எடுத்தல், நிதிப் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகள் குறித்து வழிகாட்டுகின்றனர். மேலும், 50,548-க்கும் மேற்பட்ட கிளை அளவிலான வங்கி சகிகள் கடன் இணைப்பிற்கு உதவுகின்றனர். 2013-14-ம் ஆண்டு முதல் இன்றுவரை, வங்கி சகிகள் சுய உதவிக் குழுக்கள் ரூ. 13.41 லட்சம் கோடி வங்கிக் கடனைப் பெற உதவியுள்ளனர். பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தில் ஆவாஸ் மித்ராக்கள் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றனர். தகுதியான குடும்பங்களைக் கண்டறிவது, ஆவணங்களை முழுமையாக்குவது, கட்டுமானத்தைக் கண்காணிப்பது, வீடுகள் குறித்த நேரத்தில் கட்டி முடிக்கப்படுவதை உறுதி செய்வது என ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள் பயனாளிகளுக்கு உதவுகிறார்கள். கிராமப்புற இந்தியா தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் நிலையில், சேவை வழங்கலை வலுப்படுத்தவும், வாழ்வாதாரங்களை மேம்படுத்தவும், சமூக உள்ளடக்கத்தை ஊக்குவிக்கவும், இந்த களப்பணியாளர்களின் பணி முக்கியமாக உள்ளது. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2312619®=48&lang=1 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் அலுவலகம்