பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் சாமானிய மக்களின் மருத்துவ செலவைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) வளாகத்திற்குள் அமைந்துள்ள பிரதமரின் மக்கள் மருந்தக மையம் வலுவான மாற்றத்திற்கான அடித்தளத்தை அமைத்துள்ளது. மருத்துவமனைகளில் நிலவும் பரபரப்பான சூழல்களுக்கு இடையே இளம் மருந்தாளர்கள் குறைந்த செலவில் சிகிச்சைக்கான மருந்துகளை வழங்குவதில் முன்னோடியாக திகழ்கின்றனர். மருத்துவ செலவுகளை வெகுவாக குறைத்திடும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம் சாமானிய மக்களின் சிகிச்சைக்கான செலவுகளைக் குறைக்க உதவுகிறது. எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மக்கள் மருந்தக மையத்தில் மூத்த மருந்தாளராக பணி புரிந்து வரும் சங்கீதா என்ற இளம் பெண் கடந்த அக்டோபர் 2024-ம் ஆண்டு இந்த மருந்தகம் செயல்பாட்டிற்கு வந்ததில் இருந்து தன்னை ஒரு அங்கமாக இணைத்துக் கொண்டு பணியாற்றி வருகிறார். மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் அவர் இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறார். நாள்தோறும் மக்கள் மருந்தகத்திற்கு ஒரு புதிய அர்ப்பணிப்பு உணர்வுடன் தன்னாய் இயன்ற சேவைகளை செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிடுகிறார். தில்லியில் 600-க்கும் அதிகமான மக்கள் மருந்தக மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதில் பணிபுரியும் 70 சதவீதத்திற்கும் அதிகமான இளம் ஊழியர்கள் மருந்துகளை விநியோகிக்கும் சேவைகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். மக்கள் மருந்தகங்கள் மருந்துகளை வழங்குவதுடன், சாமானிய மக்களின் மருத்துவ சிகிச்சைக்கான சுமைகளை பெருமளவில் குறைப்பதாக நோயாளிகளுக்கு நம்பிக்கை அளிப்பதுடன், அவர்களின் உடல் ஆரோக்கியமும் மேம்படுவதற்கு உதவுகிறது. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2235804®=3&lang=2 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்