நோக்கம்

இந்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும், ‘அனைவருக்கும் ஓய்வூதியம்’ (NPS – National Pension System) எனும் திட்டம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அனைத்து குடிமக்களுக்கும் ஓய்வு காலத்தில் வருமானம் கிடைக்கச் செய்வது தான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இது, முதுமையில் பொருளாதார பாதுகாப்பின்றி இருப்பதை தவிர்ப்பதுடன், மக்களுக்கு சேமிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தும் .

பொதுத் துறை வங்கிகள்

அஞ்சல் துறை, பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட 58 நிறுவனங்களில், இந்த திட்டத்துக்கான கணக்கு ஆரம்பிக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ‘பிரான் எண்’ (PRAN- Permanent Retirement Account Number) தரப்படும்.

தகுதிகள்

இது வாழ்நாளுக்கான எண். 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேரலாம்.

மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தனி நபர்கள், ஏழை எளியோர் என்று அனைவரும் பயன் பெறலாம்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் (N.R.I.) மற்றும் பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் (P.P.F.) சந்தாதாரர்களும் முதலீடு செய்யலாம். இது அனைத்து வங்கிகளிலும், குறிப்பாக தென் இந்திய வங்கிகள் அனைத்திலும் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பணம் செலுத்தும் முறை

இத்திட்டத்தில் சேர முதலில் ரூ. 600 செலுத்த வேண்டும்.

பின்னர் மாதாமாதம் குறைந்தபட்சம் ரூ. 100 வீதம் செலுத்த வேண்டும்.

நீங்கள் ரூ. 100 செலுத்தினால், உங்கள் கணக்கில் ஆண்டுக்கு ரூ. 100 மத்திய அரசு செலுத்தும் (முதல் 4 வருடங்களுக்கு மட்டும்).

அதிகபட்சமாக 12 ஆயிரம் ரூபாய் வரை மாதம் தோறும் செலுத்துபவர்கள் வரை தான் மத்திய அரசின் 1000 ரூபாய் கிடைக்கும். அதற்கு மேல் செலுத்துவோருக்கு இந்தச் சலுகை இல்லை.

சந்தாதாரருக்கு 60 வயது ஆகும் போது, அவர் கணக்கில் உள்ள தொகையில் 60% எடுத்துக் கொள்ளலாம்.

மீதி தொகையிலிருந்து மாதாமாதம் வாழ்நாள் முழுவதும் பென்ஷன் கிடைக்கும். அதுவும் 8% முதல் 12% கூட்டு வட்டியுடன்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள், இல்லத்தரசிகள், மாணவர்கள், பகுதி நேர வேலை தேடுபவர்கள் என அனைவரும் இத்திட்டத்தில் முகவர்களாக சேர்ந்து வருமானமும் ஈட்டலாம்.

ஆதாரம்: ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்