அறிமுகம்

தேசிய சிறுதொழில் கழகம், எஸ்சி எஸ்டி தொழில் முனைவோருக்கு இ-டெண்டர் முறையில் எவ்வாறு ஆர்டர் பெறுவது என்பது குறித்து பயிற்சி அளிக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

தேசிய சிறுதொழில் கழகம் இந்திய அரசின் மினி ரத்னா நிறுவனமாகும். 1955 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் அவற்றைத் தொடங்குவதற்கும் தேவையான உதவிகளை அளித்து வருகிறது. இந்நிலையில் எஸ்சி எஸ்டி தொழில் முனைவோருக்கு இ-டென்டர் முறையில் எவ்வாறு ஆர்டர் பெறுவது என்பது குறித்து பயிற்சி அளிக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

என்ஜினியரிங், ஆட்டோமொபைல், ஃபேப்ரிகேஷன் போன்ற துறைகளில் புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர், ஏற்கெனவே தொழில் தொடங்கி விட்டு இடையில் கடனுதவி தேவைப்படுபவர்கள் மற்றும் தொழிலை விரிவாக்கம் செய்ய விரும்பும் தொழில் முனைவோருக்கு வங்கிக் கடனை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை தேசிய சிறுதொழில் கழகம் மேற்கொண்டு வருகிறது.

ஜாப் ஒர்க் ஆர்டர்

இந்நிலையில், எஸ்சி, எஸ்டி பிரிவு தொழில் முனைவோருக்காக ஒரு புதிய பயிற்சி திட்டத்தைத் தொடங்கியுள்ளது. தொழில் முனைவோர் ஒர்க்கை ஆர்டர் எடுக்க இ-டெண்டர் முறை கையாளப்பட்டு வருகிறது. இந்த இ-டெண்டரில் விண்ணப்பித்து ஜாப் ஒர்க் ஆர்டர் பெறுவது எவ்வாறு என்பது குறித்து எஸ்சி, எஸ்டி தொழில் முனைவோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

தமிழகம் முழுவதும் உள்ள தேசிய சிறுதொழில் கழக அலுவலக கிளைகளின் மூலம் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த எஸ்சி, எஸ்டி தொழில் முனைவோர்கள் இப்பயிற்சியை பெற விரும்பினால் சென்னையில் உள்ள தேசிய சிறுதொழில் கழக அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

ஆதாரம்: தேசிய சிறுதொழில் கழகம்