தாட்கோ தொழில் முனைவோர் திட்டம் இத்திட்டத்தின் கீழ் வங்கிக் கடனுதவி வழங்கப்படுகிறது. திட்டத் தொகையில் 30 சதவீதம் மானியமாக வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் தொடர்ச்சியாக தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பயிற்சி வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சேர்வதற்கான தொழில் முனைவோர் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் அனைத்து தாட்கோ அலுவலகங்களிலும் கிடைக்கும். அல்லது www.tahdco.tn.gov.in அல்லது www.tahdco.com என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கல்வித் தகுதி பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்ப 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்திருந்தால் போதும். வயது வரம்பு 18-35 (வேலையில்லா இளைஞர்கள்) மாத உதவித் தொகை சென்னை மாவட்டத்திற்கு ரூ. 500, மற்ற மாவட்டங்களுக்கு ரூ. 400. இரண்டு புகைப்படங்கள், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்று, கல்வித் தகுதி மற்றும் பள்ளி மாற்று சான்று. மேலாண்மை இயக்குநர் தாட்கோ, எண்-31 2வது சந்து, செனடாப் ரோடு தேனாம்பேட்டை சென்னை - 600 018 தாட்கோ வழங்கும் தொழிற் பயிற்சிகள் பயிற்சிகள் பயிற்சி காலம் தகுதி சில்லறை விற்பனை மேலாண்மை 2 மாதங்கள் 10 ஆம் வகுப்பு எலக்ட்ரீஷியன் 12 மாதங்கள் 8 ஆம் வகுப்பு ஜ.சி.பி. பொக்லைன் போர்க்லிப்ட் ஆப்ரேட்டர் 3 மாதங்கள் 8 ஆம் வகுப்பு ஃபிட்டர் 12 மாதங்கள் 8 ஆம் வகுப்பு மோட்டார் மெக்கானிக் 12 மாதங்கள் 8 ஆம் வகுப்பு அழகுக்கலை 3 மாதங்கள் 8 ஆம் வகுப்பு உணவு தயாரித்தல் மற்றும் பரிமாறுதல் 12 மாதங்கள் 10 ஆம் வகுப்பு ஈவன்ட் மேனேஜ்மென்ட் 6 மாதங்கள் 10 ஆம் வகுப்பு கேட் / கேம் (ஆட்டோ டெஸ்க் சான்றிதழ்) 3 மாதங்கள் 12 ஆம் வகுப்பு ஹார்டுவேர் / நெட்வொர்க் 3 மாதங்கள் 12 ஆம் வகுப்பு ஆதாரம்: தாட்கோ நிறுவனம்