தர ஆய்வு

குழுக்களை உரிய காலத்தில் தர ஆய்விற்கு உட்படுத்துவது கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் பொறுப்பாகும்.

இவ்வாறு குழுக்களை தர ஆய்வு செய்வதற்கு 3 நபர்களைக் கொண்ட தர ஆய்வு அணியை அமைக்கும்.

இந்தத் தர ஆய்வு அணியில் அடுத்த ஊராட்சியை சார்ந்த சமூக வல்லுநர் ஒருவர் மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சியின் சுய உதவி குழு கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இருவர் ஆகியோர் இடம் பெறுவர்.

(அ) தர ஆய்வு அணியின் செயல்பாடுகள்

திட்டத்தில் இணைந்துள்ள அனைத்து சுய உதவி குழுக்களும் ஆண்டிற்கு ஒரு முறை தர ஆய்வு செய்யப்பட வேண்டும்.

புதிய குழுக்கள் மூன்று மாதம் முடிந்தவுடன் தர ஆய்விற்கு உட்படுத்தப்படும்.

தர ஆய்வு செய்யப்பட்ட குழுவின் முடிவினை சம்பந்தப்பட்ட குழுவிற்கு தெரிவிக்க வேண்டும்.

தர ஆய்வின் போது, குழுவின் விதிமுறைகள், சேமிப்பு, உறுப்பினர் வருகை, வங்கி கடன் மற்றும் உள்கடன் திருப்பம், பதிவேடுகள் பராமரிப்பு, தணிக்கை போன்றவற்றின் அளவீடுகளுக்கு ஏற்ப மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன.

தர ஆய்வின் முடிவின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை (பயிற்சி தேவை, நிதியிணைப்பு, ஆதார நிதி போன்றவை) கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மேற்கொள்ளும்.

குழுவின் மேம்பாட்டிற்கு கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு திட்ட ஒருங்கிணைப்பு அணி வழிக்காட்டுதலாக இருக்கும்

(ஆ) ஆதார நிதி வழங்குதல்

சுய உதவி குழுவானது தனது நிர்வாகத் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கும் வங்கி மற்றும் பிற நிறுவனங்களுடன் நிதியிணைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கும் உதவும்.

(i) தகுதிகள்

தர ஆய்வில் குறைந்த பட்சம் ‘நன்று’ பெற்ற அனைத்து வகையான குழுக்களும் ஆதார நிதி பெற தகுதியானவை.

ஒவ்வொரு சுய உதவி குழுவிற்கும் எவ்வளவு ஆதார நிதி வழங்கலாம் என்பதை கிராம வறுமை ஒழிப்பு சங்கம் முடிவு செய்யும்.

ஆதார நிதி அதிகபட்சம் ரூ. 20000 வரை ஒரே ஒரு முறை மட்டும் மான்யமாக வழங்கப்படும்.

(ii) ஆதார நிதி பெறுவதற்கு குழுக்கள் செய்ய வேண்டியவை

தகுதியுள்ள சுய உதவி குழுக்கள், ஆதார நிதி வேண்டி கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திடம் விண்ணப்பிக்க வேண்டும்.

குழு செயல்படாத பட்சத்தில் ஆதார நிதியினை திரும்ப வழங்க ஒப்புதல் தெரிவிக்கும் தீர்மானத்தையும் குழு விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

மேலும், குழுவின் தற்போதைய சேமிப்பு மற்றும் கடன் தொகையை உறுதிபடுத்தும் அறிக்கையையும் வழங்க வேண்டும்.

ஆதார நிதியை குழுவின் சேமிப்பு போலவே கருதி நிதி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தரமதிப்பீடு

குழுக்கள் வங்கி / நிதி இணைப்பு பெறுவதற்காக செய்யப்படும் மதிப்பீடே தர மதிப்பீடு.

ஊரக வளர்ச்சி துறை, டாம்கோ, டாப்செட்கோ, தாட்கோ போன்ற திட்டங்கள் பிற நிறுவன நிதி இணைப்பு பெறுவதற்காக குழுக்கள் தரமதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படுகின்றன.

இந்த மதிப்பீட்டு அணியில் வங்கிப் பிரதிநிதி ஒருவர், ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு பிரதிநிதி ஒருவர் மற்றும் புதுவாழ்வு திட்டப் பணியாளர் ஒருவர் உறுப்பினராக இருப்பர்.

தரமதிப்பீட்டின் போது, குழுவின் விதிமுறைகள், சேமிப்பு, உறுப்பினர் வருகை, வங்கி மற்றும் உள்கடன் திருப்பம், பதிவேடுகள் பராமரிப்பு, தணிக்கை போன்ற அளவீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

தணிக்கை

சுய உதவி குழுவில் குறிப்பிட்ட காலத்தில் நடைபெற்றுள்ள நிதி சம்பந்தமான நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தல்.

தணிக்கை செயல்பாடுகள்

(1) உள்தணிக்கை

ஒவ்வொரு குழுவும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை உள்தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

ஆறு மாதம் முடிந்து ஒரு மாத இடைவெளிக்குள் உள் தணிக்கையினை முடித்திருக்க வேண்டும் (செப்டம்பர் மற்றும் மார்ச் மாத முடிவில்).

உள் தணிக்கைக்கான செலவினை (6 மாதங்களுக்கு ஒரு முறை) குழு ஒன்றிற்கு ரூ. 50 வீதம் ஆரம்ப கட்டத்தில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் வழங்கலாம்.

(2) வெளித்தணிக்கை

குழுக்கள் வருடத்திற்கு ஒருமுறை வெளித்தணிக்கைக்கு (மார்ச் மாதம் முடிந்தவுடன்) உட்படுத்தப்படும். 2 வருடம் முடிந்த 3 மாதங்களுக்குள் வெளிதணிக்கை முடித்திருக்க வேண்டும்.

2 வருடங்கள் முடியாத குழுவிற்கு ரூ. 125 வீதம் செலவிடலாம், 50% செலவினம் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தால் மேற்கொள்ளப்படும்.

2 வருடங்கள் முடிந்த குழுக்களுக்கு ரூ. 150 வீதம் செலவிடலாம். இச்செலவினை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பொது நிதியிலிருந்து மேற்கொள்ள வேண்டும்.

(3) தணிக்கையாளர்கள்

கிராம வறுமை ஒழிப்பு சங்கம் குறைந்த பட்சம் 30 சுய உதவி குழுக்களுக்கு ஒரு சமூக சுய உதவி குழு தணிக்கையாளரை அடையாளம் கண்டு பயிற்சி அளிக்க வேண்டும். இவர்களை உள்தணிக்கை செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.

2 வருடம் முடிவடைந்த குழுக்களுக்கு சமூக தணிக்கையாளர் / பட்டய கணக்காளர்களை (ஆடிட்டர்) கொண்டு வெளித்தணிக்கை செய்ய வேண்டும்.

தணிக்கை சம்பந்தமான நடவடிக்கைகளுக்கு திட்ட ஒருங்கிணைப்பு அணி கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

(4) தணிக்கை அறிக்கை

அனைத்து தணிக்கை அறிக்கைகளும் தமிழில் தயாரிக்க வேண்டும்.

அறிக்கைகள் குழுவில் விவாதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

1. ஐந்தொகை (Trial balance)

2. பெறுதல், செலுத்துதல் அறிக்கை

3. வரவு செலவு அறிக்கை

4. இருப்பு நிலை குறிப்பு

5. உறுப்பினர்களின் சேமிப்பு / கடன் உறுதி செய்யும் படிவம்

செயல்படாத மற்றும் தரத்தில் பின்தங்கிய குழுக்களை வலுப்படுத்தி வளர்ச்சியடைய செய்வதில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் முழு கவனம் செலுத்த வேண்டும்.

குழுக்களின் பிரச்சனைகளை கண்டறிந்து தீர்க்க உதவி வழங்க வேண்டும்.

கிராம வறுமை ஒழிப்பு சங்கம் சுய உதவி குழுக்களின் வளர்ச்சிக்கு கீழ்கண்ட சமூக பணியாளர்களின் உதவியையும் திட்ட ஒருங்கிணைப்பு அணியின் வழிகாட்டுதலையும் பெற்று செயல்படும்.

1. சமூக சுய உதவி குழு பயிற்றுநர்கள்

2. சமூக தணிக்கையாளர்கள்

3. சமூகத் தர ஆய்வு அணி

ஆதாரம்: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்