கூட்டமைப்பு விளக்கம் ஓரே ஊராட்சியில் செயல்பட்டு வரும் அனைத்து சுய உதவிக் குழுக்களும் ஒன்றிணைந்த தங்களின் சமுக பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் சுயசார்பு பெறவும் கூட்டாக செயல்படும் ஜனநாயக அமைப்பே, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு ஆகும். “தனி மரம் தோப்பாகாது” மற்றும் “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்பதற்கிணங்க இலக்கு மக்கள், தனிநபராய், குழுவாய் சாதிக்க முடியாத பல்வேறு விஷயங்களை கூட்டமைப்பாக சாதிக்க முடியும். கூட்டமைப்பாக இணையும் போது கிடைக்கும் வலிமையால் குழுக்களின் பிரச்சனையை தீர்க்க முடியும் கிராம வளர்ச்சிக்காக பாடுபட முடியும் பெண்களின் பிரச்சனையை உரிய நிலைக்கு எடுத்து செல்ல முடியும் குழுவால் செய்ய இயலாத தொழில்களை கூட்டமைப்பாக செய்ய முடியும். கூட்டு கொள்முதல் (ம) விற்பனை மூலம் உறுப்பினர்களின் வருமானத்தை உயர்த்த முடியும். ஊராட்சி அளவிலான கூட்டமைப்பினை மறுசீரமைப்பதின் அவசியம் அ. கூட்டமைப்புகளின் முந்தைய நிலை (அமைப்புரீதியான அளவில்) 1. ஒவ்வொரு சுய உதவி குழுவிலிருந்தும் இரண்டு பிரநிநிதிகளைக் கொண்டு ஊராட்சியில் கூட்டமைப்பு செயல்பட்டு வந்தது. 2. ஒவ்வொரு ஊராட்சியிலும் குக்கிராமங்களின் எண்ணிக்கை மற்றும் சுய உதவிக் குழுக்களின் எண்ணிக்கை மாறுபடுகின்றன ஆ. கூட்டமைப்பின் முந்தைய நிலையில் இருந்த சிரமங்கள் (நிர்வாகரீதியான அளவில்) அனைத்து சுய உதவி குழுக்களும் கூட்டமைப்பில் இணைந்து செயல்படவில்லை. குடியிருப்பு அளவில் ஒரு அமைப்பு இல்லாததால் கூட்டமைப்பின் முடிவுகள் அனைவரது பங்கேற்புடன் நடைபெறவில்லை. கூட்டத்திற்கு அதிக உறுப்பினர்கள் வருவதால் கூட்டம் நடத்துவதற்கும், தகவல் தொடர்புக்கும் மிகச் சிரமமாக உள்ளது. கூட்டமைப்பின் நிர்வாகிகள் தவிர மற்றவர்களுக்கு கூட்டமைப்பு செயல்பாடுகள் பற்றி தெரியவில்லை. நிர்வாகிகள் பதவியில் சுழற்சி மற்றும் தேர்தல்களும் சரிவர நடப்பதில்லை உறுப்பினர்களின் ஈடுபாடு குறைவாக இருந்ததால் செயலாளர், இணைச்செயலாளர், பொருளாளர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. குழுக்களில் இலக்கு மக்கள் அதிகமாக இருந்த போதிலும், நிர்வாகிகளில் இலக்கு மக்களின் பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. பெரும்பான்மையான கூட்டமைப்புகள் சுயமாகச் செயல்படாமல் ஏட்டளவில் தான் இருந்தன. இ. கூட்டமைப்பு மாற்றியமைப்பதின் அவசியம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பினை ஜனநாயகத் தன்மையுடைய, தற்சார்புடைய, குழுக்களுக்கு துணைபுரியும் அமைப்பாக மாற்றிட அனைத்துக் குழுக்களின் பிரதிநிதித்துவம் மற்றும் பங்கேற்பை உறுதி செய்யும் அமைப்பாக உருவாக்கிட அனைத்து உறுப்பினர்களின் நிர்வாகத் திறமைகளை / திறன்களை மேம்படுத்திட நிர்வாகிகளை சுழற்சி முறையில் மாற்றி அனைவரையும் பொறுப்புடன் செயல்பட வைத்திட அனைத்து குழுக்களின் பிரதிநிதித்துவம், வெளிப்படை தன்மை மற்றும் பங்ககேற்பை உறுதி செய்யும் அமைப்பாக உருவாக்கிட உள்ளுர் அளவில் சமூக பொருளாதார ரீதியில் நீடித்த நிலைத்த தன்மையுடைய அமைப்பாக உருவாக்கிட ஆதாரம்: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்