உயிர் மூச்சு

அனைவரும் ஒன்றுகூடி, முடிவெடுத்து செயல்படுவோம்

அனைத்து செயல்களிலும் வெளிப்படையாக இருப்போம்

மகளிருக்கு முன்னுரிமை அளிப்போம் ஏழை எளியோர் முன்னேற உதவி செய்வோம்

மாற்றுத் திறனாளி, நலிவுற்றோருக்கு உறுதுணையாக இருப்போம்

நாணயத்துடன் நமது கிராம நிதியைப் பயன்படுத்துவோம்.

ஒன்று கூடி முடிவெடுத்து செயல்படுதல்

ஒவ்வொரு கூட்டமைப்பும் தங்களுக்குள் ஒன்றாக, ஒரே அணி என்ற உணர்வுடன் செயல்படுதல் வேண்டும்.

ஒன்று கூடி முடிவெடுக்கும் முறைகள்

கூட்டம் நடத்துதல்

மற்றவர் கருத்துக்கு மதிப்பளித்து முடிவெடுத்துச் செயல்படுதல்.

வெளிப்படையான செயல்

ஒவ்வொரு கூட்டமைப்பும் அனைத்து செயல்களிலும் வெளிப்படையாக இருத்தல் அவசியம்.

செயல்படுத்தும் முறைகள்

கூட்டமைப்பில் பதிவேடுகள் முறையாக பராமரித்தல்,

கூட்ட முடிவுகளை அனைவருக்கும் தெரிவித்தல்,

அனைத்து தகவல்களையும் அறிவிப்பு பலகைகளில் வெளியிடுதல்

மகளிர்க்கு முன்னுரிமை அளித்தல்

கூட்டமைப்பின் ஒவ்வொரு செயலிலும் மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

வழிகள்

அனைத்து மகளிர் குழுக்களையும் கூட்டமைப்பில் இணைத்தல்,

கூட்டமைப்பின் நிர்வாகிகளாக மகளிரை தேர்ந்தெடுத்தல் போன்றவை.

ஏழை, எளியோர் முன்னேற உதவி செய்தல்

கூட்டமைப்பு

ஏழை மக்களின் திறமைகளை அறிந்து அதற்கேற்ப பயிற்சி அளிக்க வேண்டும்.

தேவையை அறிந்து ஏழை மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து, தொழில் துவங்க ஊக்குவிக்க வேண்டும்.

தொழில் பயிற்சி, புதிய தொழில் துவங்குதல் பழைய தொழில் விரிவாக்கம் போன்ற அனைத்து தொழில் சார்ந்த செயல்பாடுகளுக்கு நிதி இணைப்பு செய்தல்..

மாற்றுத் திறனாளி / நலிவடைந்தோருக்கு உறுதுணையாக இருத்தல்

கூட்டமைப்பு மாற்றுத் திறனாளி (ம) நலிவடைந்தோர் வாழ்வில் முன்னேறத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.

வழிகள்

மாற்றுத் திறனாளி (ம) நலிவுற்றோரை குழுக்களில் இணைத்து அதன் மூலம் திட்ட நிதிகளை பயன் பெற செய்தல்.

பிறரை சாறாமல் வாழ்வில் முன்னேற உதவி செய்தல்.

நாணயத்துடன் நமது கிராம நிதியைப் பயன்படுத்துதல்

கூட்டமைப்பும் தாம் திரட்டும் அனைத்து நிதியினையும் நாணயமாக, நேர்மையாக, சிக்கனமாக செலவிட வேண்டும்.

வழிகள்

திட்டமிட்டு செயல்படுத்துதல்

நிதியின் பயன் உரிய மக்களுக்கு சென்றடைய செய்தல்.

எக்காரணம் கொண்டும் நிதி தவறாக வீணடிக்கப்படாததை உறுதி செய்தல்.

குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை முறையாக பயன்படுத்தப்படுதல், திரும்ப செலுத்தப்படுதலைக் கண்காணித்தல்.

தொகுத்தளித்தல்

நாம் நம் கூட்டமைப்பினை உயிர்மூச்சுப்படி செயல்படுத்தினால் நம் இலட்சியமான உறுப்பினர்களின் வளர்ச்சி, குழுக்களின் வளர்ச்சி மற்றும் கூட்டமைப்பின் வளர்ச்சியினை எளிதாக அடைய முடியும்.

ஆதாரம்: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்