திறன் மேம்பாட்டு இயக்கத் திட்டம் மத்திய அரசின் திறன் மேம்பாட்டு இயக்கத் திட்டத்தின் [Skill India Mission (SIM)] கீழ், திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகம் [Ministry of Skill Development and Entrepreneurship (MSDE)] பல்வேறு திட்டங்களின் வாயிலாக நாடு முழுவதும் (ஆந்திரப் பிரதேசம் உட்பட) உள்ள அனைத்துப் பிரிவு மக்களுக்கும், பெண்கள் உட்பட திறன் பயிற்சி, மறுதிறன் பயிற்சி, மேம்பட்ட திறன் பயிற்சிகளை வழங்குகிறது. திட்டத்தின் நோக்கம் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), செமிகண்டக்டர் வடிவமைப்பு (Semiconductor Design), புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Renewable Energy) போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் உட்பட, தொழில்துறைக்குத் தேவையான திறன்களைப் பெற்று, எதிர்காலத்திற்குத் தயாராகும் வகையில் இந்திய இளைஞர்களை (பெண்கள் உட்பட) மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். பெண்களின் பங்கேற்பை ஊக்குவிக்க சிறப்பு ஏற்பாடுகள் திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில், போக்குவரத்து, தங்குமிடம்/உணவுக்கான செலவுகளை ஈடுகட்டவும், வேலைவாய்ப்பு பெற்ற பிறகு கூடுதல் உதவிகளை வழங்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாகப் பின்தங்கிய அல்லது பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளைச் சேர்ந்த பெண்களை முதன்மைப் பயனாளிகளாகக் கொண்ட திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்துச் சிறப்பு கவனம் செலுத்துகிறது. மேலும், பெண்களுக்கென பிரத்யேகமாக 19 தேசிய திறன் பயிற்சி நிறுவனங்களும், 300-க்கும் மேற்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களும் உள்ளன. திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் பயிற்சி பெற்ற பெண்கள் மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவு அமைச்சகத்தின் முக்கிய திட்டங்களின் கீழ் பயிற்சி பெற்ற பெண் விண்ணப்பதாரர்களின் மாநில வாரியான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில், பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஜூன் 30-ம் தேதி வரை 5,50,060 பெண்களும், தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ், 1,42,752 பெண்களும், மக்கள் கல்வி நிறுவனத்தின் வாயிலாக, 93,578 பெண்களும், சிடிஎஸ் / ஐடிஐ திட்டத்தின் கீழ், 38,276 பெண்களும் பயிற்சி பெற்றுள்ளனர். மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294851®=48&lang=1 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்