ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்டம் 1 திட்டத்தின் நோக்கங்கள் 0-6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல், இளம் குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கு சத்துணவு வழங்குதல். இத்திட்டம் 5 ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்டங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. 688 அங்கன்வாடி மையங்கள் இத்திட்டத்தின் கீழ் இத்துறையால் நடத்தப்பட்டு வருகின்றன. 1. ஒ.கு.ந.தி. திட்டம் I, வில்லியனூர் (141 மையங்கள்) 2. ஒ.கு.ந.தி. திட்டம் II, காரைக்கால் (141 மையங்கள்) 3. ஒ.கு.ந.தி. திட்டம் III, அரியாங்குப்பம் (122 மையங்கள்) 4. ஒ.கு.ந.தி. திட்டம் IV, முத்தியால்பேட்டை (126 மையங்கள்) 5. ஒ.கு.ந.தி. திட்டம் V, சித்தன்குடி (138 மையங்கள்) மாஹே ( 12 மையங்கள்) ஏனாம் ( 8 மையங்கள்) 2 அளிக்கப்படும் சேவைகள் 1. இணை உணவு வழங்குதல் 2. மருத்துவப் பரிசோதனை 3. மருத்துவ மேல் பரிந்துரை 4. தடுப்பூசி போடுதல் 5. சத்துணவு மற்றும் சுகாதாரக் கல்வி 6. முறை சாரா முன் பருவக் கல்வி 3 பயனடைவோர் 1. கர்ப்பிணிப் பெண்கள் 2. பாலூட்டும் தாய்மார்கள் 3. 15-45 வயதுக்குட்பட்டப் பெண்கள் 4. வளரினப் பெண்கள் 5. 0-6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 4 எங்கு பயனடைவது? அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் அங்கன்வாடி மையம் 5 மேலும் தகவலுக்கு அனுக வேண்டியவர் சம்பந்தப்பட்ட பகுதியின் குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி. ஆதாரம்: புதுச்சேரி அரசு