மகளிர் சம்மான் சேமிப்புச் சான்றிதழ்கள் மகளிர் சம்மான் சேமிப்புச் சான்றிதழ்கள், 2023 [Mahila Samman Savings Certificates, 2023] நாட்டிலுள்ள 1.59 லட்சம் அஞ்சல் நிலையங்களில் கிடைக்கும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வரும் என்ற அறிவிப்புடன், அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. விடுதலையின் அமிர்தப் பெருவிழாவையொட்டி, 2023-24 பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சரால் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், நிதிச் சேர்க்கையுடன் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். இந்த இரண்டு ஆண்டு காலத் திட்டம், 7.5 சதவீத நிலையான வட்டி காலாண்டுக்கு ஒருமுறை அசலுடன் சேர்க்கும் வகையிலான, பகுதியளவை திரும்பப் பெறும் அம்சத்துடன் கூடிய நெகிழ்வான முதலீடாகும். அதிகபட்ச உச்சவரம்பு இரண்டு லட்சம் ரூபாயாக இருக்கும். இந்தத் திட்டம் மார்ச் 31, 2025 வரையிலான இரண்டு வருட காலத்திற்கு செல்லுபடியாகும். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்