அறிமுகம்

உடனடிப் பங்கு மாற்றகம், அங்கீகாரம் பெற்ற பங்கு மாற்றங்களில் பட்டியலிடப்பட முடியாத பங்குகளைக் கொண்ட சிறிய மற்றும் மித அளவு நிறுமங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் குறைகளைப் போக்குவதற்கு ஏற்படுத்தப்பட்டதாகும். இது முக்கிய நிதி நிறுவனங்களான யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியா (UTI), இந்திய உற்பத்தித் தொழில் கடன் மற்றும் முதலீட்டுக் கழகம் (ICICI), இந்திய உற்பத்தித் தொழில் வளர்ச்சி வங்கி (IDBI), இந்திய தொழில் நிதிக் கழகம் (IFCI), கனரா வங்கி நிதிச் சேவைகள் (Canara Bank Financial Services) ஆகியவை ஒருங்கிணைந்து இந்திய உடனடி பங்கு மாற்றகத்தை (OTCEI), தோற்றுவித்துள்ளன.

இது பத்திர ஒப்பந்தச் சட்டத்தின் 4-ஆம் பிரிவால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட பங்கு மாற்றகமாகும்.

பரஸ்பர நிதிகள்

இந்திய பத்திர மற்றும் மாற்றங்கள் வாரியம் (பரஸ்பர நிதிகள்) ஒழுங்கு படுத்துதல் 1993 விதிகளின்படி, 'பரஸ்பர நிதி' என்பது "அறக்கட்டளை அல்லது கூட்டுரு அமைப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு நிதி. இதன் அறங்காப்பாளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட திட்டங்களின் கீழ் சிறு அலகுகள் (Units) மூலமாக பொதுமக்களிடமிருந்து பணத்தை மூலதனமாகப் பெற்று நிறுமம் மற்றும் பல்வேறு வாணிப நிறுவனங்களின் தங்கள் அமைப்பின் சட்டத்திற்குட்பட்டு முதலீடு செய்யும்” என வரைவிலக்கணம் கொடுத்துள்ளது.

பரஸ்பர நிதிகள் சிறு முதலீட்டாளர்களின் சேமிப்பைத் திரட்டி, அவற்றை அரசு மற்றும் பிற நிறுமங்களின் பத்திரங்களில் முதலீடு செய்து, மூலதன ஆதாயம் (Capital gain) பெறுவதுடன், வட்டி மற்றும் பங்காதாயத்தையும் பெறுகிறது. 'சிறுதுளி பெருவெள்ளம்' என்ற கோட்பாட்டின்படி இவை செயல்படுகின்றன.

முதலீட்டாளர்களிடமிருந்து பணம் பெறுவதற்குப் பரஸ்பர நிதிகள் எளிய முறையைக் கடைப்பிடிக்கின்றன. நிதியின் முதல் சம் மதிப்புள்ள சிறு பிரிவுகளாகப் (பின்னங்களாக) பிரிக்கப்பட்டு, அலகுகள் எனப்படுகின்றன. முதலீட்டாளர் ஒவ்வொருவரும் அவரவர் மூலதனத்திற்கு ஏற்ப அலகுகள் ஒதுக்கப்படுகின்றன.

நன்மைகள்

1. சிறு முதலீட்டாளர்களின் சேமிப்பை ஒன்று திரட்டி அவற்றை நிறுமங்களில் முதலீடு செய்கிறது.

2. பரஸ்பர நிதிகள் பெற்றிருக்கும் பல முதலீட்டுத் திட்டங்களில் துறைகளில்) சிறு மற்றும் மத்திய தர முதலீட்டாளர்கள் பங்குகொள்ளும் பயனை அளிக்கிறது. பலதரப்பட்ட பங்குகள், பிணையங்களில் முதலீடு செய்வதன் மூலம் பரஸ்பர நிதிகள் தங்களுக்கு ஏற்படும் இடர்களைப் (risk) பரவலாக்குகிறது. இது சிறிய மற்றும் மத்திய தர முதலீட்டாளர்களுக்கு இயலாது.

தரகர்கள் தங்களின் விலை பட்டியல்கள் (Quotes) ஆணைகள், கலந்தாராய்ந்த பேரங்கள், உள்வீட்டு பேரங்கள் ஆகியவற்றைத் தன் அலுவலகங்களிலிருந்து கணிப்பொறி வாயிலாக ஒரு மத்திய வாணிக இயந்திரத்திற்கு (Central Trading Engine) தரகர்களின் செயல் நிலையத்தின் மூலம் அனுப்புவர். சிறந்த ஏலத் தொகையும் (Best bid) சிறந்த முனைவும் (Best Offer) எல்லா தரகர்களின் செயல் நிலையத்திற்கும் சந்தைத் தகவல் ஒளிபரப்பு (Broadcast of Market information) மூலம் அளிக்கப்படுகிறது. அந்தந்த பிணையங்களுக்குத் தரகர்களால், வியாபாரிகளால் கொடுக்கப்பட்டுள்ள வாங்கிய மற்றும் விற்ற ஆணைகளுடன் அவற்றின் தற்போதைய சந்தை விலை பொறுத்திப் பார்க்கப்படும். விலைகள் ஒப்பிடப்பட்டு பேரம் முடிந்தவுடன் அந்நடவடிக்கை முடிவு பெறும். அந்நடவடிக்கை உறுதி செய்யப்பட்டு அத்தகவல் தரகர்களுக்கு அனுப்பப்படும். தரகர்கள் அவற்றை நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.

போல்ட்டின் ஆற்றல்கள்

மனித செயல்பாட்டு தொகுதிகளில் (manual system) இயற்கையாகவே அமைத்திருக்கின்ற செயற்திறமின்மையைப் போக்குகின்றது.

பங்கு மாற்றகங்களின் வாணிகக் கொள்திறனை அதிகரிக்கின்றது.

பொருந்திவராத வணிகத்தைத் (unmatched trades) தவிர்க்கிறது. நடவடிக்கைகளின் நிலையைத் தெளிவாக ஊடுருவிக் காட்டுகிறது.

அறிவிப்புகள் நடவடிக்கைகளின் நிலையை தாமதப்படுத்துவதில்லை.

அண்மைத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தித் தடங்கலற்ற முறையில் சந்தை நடவடிக்கைகள் நடைபெறச் செய்கின்றது.

மின்னியியல் வாயிலாக (electronic media) தரகர்களின் பின் அலுவலகத் தொகுதிகளுடன் (Back-office systems) நேரடி இணைப்பை ஏற்படுத்தி வாணிக நடவடிக்கைகள் நடைபெற உதவுகின்றது.

பங்குகளின் விலைகள், குறியீடுகள் போன்ற தகவல்களை உபயோகிப்பாளருக்கு அளிக்கின்றது.

பங்கு மாற்றாகங்களுக்கு நன்கு ஆராயப்பட்ட தகவல்களை அளிக்கின்றது.

சிறந்த கட்டுப்பாட்டு முறைக்குள் பங்கு மாற்றகங்களின் செயல்பாடுகளைக் கொண்டு வருவதற்காகப் பல வகையான வரம்புகளை விதித்திருக்கின்றது.

போல்ட்டின் சாதனைகள்

சராசரி பதிலளிப்பு நேரம் (response time) இரண்டு வினாடிகளுக்கும் குறைவானது.

ஒவ்வொரு நாளும் சராசரியாக 3.4 மில்லியன் சந்தைக் கேள்விகளைச் (Queries) செயல்படுத்துகிறது.

இந்த போல்ட் தொகுதி 10,000க்கும் அதிகமான உபயோகிப்பாளருக்கு இணைப்பு கொடுக்க இயலும்.

தமது வாடிக்கையாளர்களுக்கு நல் ஆக்க விளைவை (Better Yield) அளிக்கிறது. பரஸ்பர நிதி, பேரளவு சிக்கனம் (Economics of Scale) பலவற்றைப் பெறுகிறது. தான்பெறும் இலாபத்தை தம் வாடிக்கையாளர்களுக்குப் பங்காயதாயம் மற்றும் மூலதன உயர்மதிப்பாக வழங்குகிறது.

பரஸ்பர நிதிகள் தம் வாடிக்கையாளருக்குக் குறைந்த செலவில் திறமையான முதலீட்டுச் சேவையாற்றுகின்றன.

குறிப்பிட்ட பரஸ்பர நிதிகள் தங்கள் வாடிக்கையாளருக்குத் தனிப்பட்ட வரிச் சலுகைகளை அளிக்கின்றன.

சில பரஸ்பர நிதிகள் அலகுகளை ஒரு திட்டத்திலிருந்து மற்றொரு திட்டத்திற்கு மாற்றிக்கொள்ள அனுமதியளிக்கின்றன. இதனால், எளிதாக மாற்றிக்கொள்ளக்கூடிய முதலீட்டுத் திட்டங்களை அளிக்கின்றன.

சிறிய முதலீட்டாளர்களுக்கு நீர்மைத்தன்மையும், முதலீடு செய்வதற்கான வசதிகளையும் அளிக்கின்றது. அதாவது எப்போது வேண்டுமானாலும் முதலீட்டாளர்கள் தங்கள் அலகுகளை விற்பனை செய்யலாம்.

பரஸ்பர நிதிகள் இல்லையெனில், சிறிய முதலீட்டாளர்களால் தங்கள் சிறுசேமிப்பைக் கொண்டு பேரளவு தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்வது இயலாததாகிவிடும். மூலதன சந்தை வளர்ச்சி பெற பரஸ்பர நிதிகள் முக்கியப் பங்காற்றுகின்றன.

பத்திரங்களுக்கு நிரந்தர மற்றும் தொடர்ச்சியான உள்நாட்டுத் தேவையை பரஸ்பர நிதிகள் ஏற்படுத்தித் தருகின்றன.

சிறு முதலீட்டாளர்களின் சிறுசேமிப்பை ஒன்றுதிரட்டி அவற்றைத் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான நிலை முதலை (Fixed capital) வழங்குவதன் மூலம் தொழில்துறை முன்னேற்றத்தை உண்டாக்குகிறது.

ஆரம்ப பொது விடுப்புகளுக்குச் (Inital public offerings) சிறந்த மாற்றாக பரஸ்பர நிதிகள் விளங்குகின்றன. இவ்வாறாக, பரஸ்பர நிதிகள் பங்குகளுக்கு நிலையான தன்மையும், முதலீட்டாளர்களுக்குக் காப்பும், தொழிலதிபர்களுக்கு நிதி வளங்களையும் ஒருசேர அளிக்கின்றன.

பம்பாய் நேரடி வணிகம் (Bombay Online Trading - BOLT)

போல்ட் என்பது மும்பை பங்குச் சந்தையில் மார்ச் 1995 முதல் நடைமுறையில் உள்ள ஒரு வணிகச் செயல்பாடாகும். உலக நாடுகளில் பலவற்றில் பங்கு வணிகத்திற்காகப் பின்பற்றப்பட்டு வரும் கலப்பின பலதரப்பட்ட வணிக முறையில் ஒன்றாகும். அது ஆணை மற்றும் விலை நிலவரத்தின் அடிப்படையில் செயல்படுவதாகும். இது சாதாரண மற்றும் தொடர் நிகர தீர்வுகளையும் பெற உதவியளிக்கிறது. தற்சமயம், 6000 பம்பாய் பங்கு மாற்றகத்தின் வணிக இணைப்புகள் (Trading Terminals) நாடு முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆதாரம்: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்