பவ்யா இணையதளம் 'பாரத் தொழில் வளர்ச்சி [Bharat Audyogik Vikas Yojna (BHAVYA)] திட்டத்தைச் செயல்படுத்துவதில், ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் (Union Minister of Commerce & Industry) புதுதில்லியில் அதற்கான இணையதளத்தைத் தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ், மாநிலங்கள், தங்களது தொழில்துறை சார்ந்த வலிமை, நிலம் கையகப்படுத்துதல், முதலீட்டாளர்களின் ஆர்வம், துறைசார்ந்த வாய்ப்புகள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி விரிவான திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க ஊக்குவிக்கப்படும். ரசாயனம், உற்பத்தி, தரவு மையங்கள் அல்லது பிற தொழில்கள் என எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு இடத்திற்கும் மிகவும் பொருத்தமான துறைகள், உள்கட்டமைப்புத் தேவைகளை அடையாளம் காண மத்திய அரசு தொழில்துறையுடன் இணைந்து செயல்படும். நிலம் கையகப்படுத்துதல், போக்குவரத்து வசதிகள், சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள உள்கட்டமைப்பு உள்ளிட்ட தொழில்துறை பூங்காக்கள் குறித்த விரிவான தகவல்களை முதலீட்டாளர்கள் டிஜிட்டல் தளங்கள் மூலம் பெற முடியும். மேலும், இது அவர்கள் சரியான முதலீட்டு முடிவுகளை மேற்கொள்ள உதவிடும். பல்வேறு துறைகள், முதலீட்டாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப தொழில்துறை பூங்காக்கள் வடிவமைக்கப்படுவதை உறுதி செய்வதன் மூலம், உள்நாட்டு, சர்வதேச முதலீடுகளுக்கு உகந்த இடங்களாக மாற்றுவதற்கும் இத்திட்டம் உதவிடும். மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270334®=3&lang=1 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்