பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உண்டு-உறைவிடப் பள்ளிக் கல்வி விடுதி வசதிகள் பல்வேறு மத்தியத் துறைகள், மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டங்கள் மூலம், பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தரமான உண்டு-உறைவிடப் பள்ளிக் கல்வி, விடுதி வசதிகளை மத்திய அரசு தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. பிரதமரின் பட்டியலின மேம்பாட்டுத் திட்டத்தின் விடுதிகள் அமைக்கும் பிரிவின் கீழ், பட்டியலின மாணவர்களுக்கான புதிய விடுதிகள் கட்டுவதற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்களிடமிருந்து பெறப்படும் பரிந்துரைகள், தேவை சார்ந்த மதிப்பீட்டு ஆய்வுகளின் அடிப்படையில் இதற்கான முன்மொழிவுகள் அங்கீகரிக்கப்படுகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பட்டியலின மாணவர்களுக்காக இரண்டு விடுதிகள் (ஒன்று மாணவர்களுக்கும் மற்றொன்று மாணவிகளுக்கும்) அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 500 மாணவர்கள் வரை தங்கும் வசதி கொண்ட இந்த விடுதிகளின் கட்டுமானப் பணிகளுக்காக ரூ. 7.50 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ள விடுதிகளைப் பழுதுபார்ப்பதற்கு, அவை நடைமுறைக்கு வந்த பிறகு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசின் உதவியைப் பெற அவற்றைச் செயல்படுத்தும் முகமைகளுக்கு வாய்ப்புள்ளது. இத்தகைய முயற்சிகள் மூலம், கல்வி பயில்வதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதிலும், உண்டு-உறைவிடக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும், பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் தரமான கல்வியைப் பெறுவதை உறுதி செய்வதிலும் மத்திய அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2301279®=6&lang=11 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்