தமிழக அமைச்சரவை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவையில் அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். திரு மு.க.ஸ்டாலின் - முதல்-அமைச்சர் - பொதுத்துறை, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல்பணி, இந்திய வனப் பணி, மற்ற அகில இந்தியபணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்புமுயற்சிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலன். திரு துரைமுருகன் - நீர்வளத்துறை அமைச்சர் - சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத்திட்டங்கள், சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, தேர்தல்கள், கடவுசீட்டுகள் மற்றும் சட்டம். திரு.உதயநிதி ஸ்டாலின் - துணை முதலமைச்சர் - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, வறுமை ஓழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள், திட்டம் மற்றும் வளர்ச்சி திரு கே.என்.நேரு - நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் - நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல். திரு இ.பெரியசாமி - ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் - ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள். திரு எ.வ.வேலு - பொதுப்பணித்துறை அமைச்சர்- பொதுப்பணிகள், (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்). திரு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் - வேளாண்மை, வேளாண்மை பொறியியல், வேளாண் பணிக்கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத்தீர்வை, கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு. திரு கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் - வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் - வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், பேரிடர் மேலாண்மை. திரு தங்கம் தென்னரசு - நிதி மற்றும் சுற்றுசூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் - நிதித்துறை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கால நன்மைகள் மற்றும் தொல்லியல் துறை, சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாடு மற்றும் காலநிலை மாற்றம் திரு எஸ்.ரகுபதி - இயற்கை வளங்கள் துறை அமைச்சர் - நீதிமன்றங்கள், சிறைச்சாலை, ஊழல் தடுப்புச்சட்டம், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள். திரு சு.முத்துசாமி - வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் - வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி, நகரமைப்புத்திட்டமிடல் மற்றும் வீட்டுவசதி மேம்பாடு, இட வசதி கட்டுப்பாடு, நகர திட்டமிடல் மற்றும் நகர்பகுதி வளர்ச்சி, மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக்கசண்டு (மொலாசஸ்) திரு கே.ஆர்.பெரியகருப்பன் - கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு தா.மோ.அன்பரசன் - குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் - குடிசைத்தொழில்கள், சிறுதொழில்கள் உள்ளிட்ட ஊரகத்தொழில்கள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம். திரு மு.பெ.சாமிநாதன் - தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் - தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச் சட்டம், பத்திரிகை அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம். திருமதி பி.கீதா ஜீவன் - சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் - மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூகநலம், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம் திரு அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் - மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் - மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக் கழகம் கால்நடை பராமரிப்பு. திரு ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் - வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் - வனம், கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம். திரு ஆர்.ராஜேந்திரன் - சுற்றுலாத்துறை அமைச்சர் - சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சர்க்கரை, கரும்புத்தீர்வை, கரும்புப்பயிர் மேம்பாடு திரு அர.சக்கரபாணி - உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் - உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர்பாதுகாப்பு, விலைக்கட்டுப்பாடு.. திரு ஆர். காந்தி - கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் - கைத்தறி மற்றும் துணிநூல், பூதானம் மற்றும் கிராமதானம். திரு மா.சுப்பிரமணியன் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் - மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வு திரு பி.மூர்த்தி - வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்- வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு. திரு எஸ்.எஸ்.சிவசங்கர் - போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் - போக்குவரத்து,நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் இயக்கூர்தி சட்டம், மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு திரு பி.கே.சேகர்பாபு - இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் - இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம். டாக்டர் கோவி .செழியன் - உயர்கல்வித் துறை அமைச்சர் - தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட உயர்கல்வி,மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் திரு பழனிவேல் தியாகராஜன் - தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் - தகவல் தொழில் நுட்பவியல் துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் திரு.எஸ்.எம்.நாசர் - சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் - சிறுபான்மையினர் நலன், வெளிநாடுவாழ் தமிழர் நலன், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வஃக்ப் வாரியம் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் - பள்ளிக்கல்வி. திரு. சிவ. வீ. மெய்யநாதன் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் - பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன் திரு சி.வி.கணேசன் - தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் - தொழிலாளர் நலன், மக்கள் தொகை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகரம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு. திரு த. மனோ தங்கராஜ் - பால்வளத்துறை அமைச்சர் - பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி. திரு டாக்டர். டி .ஆர் .பி . ராஜா - தொழில்துறை அமைச்சர் - தொழில்கள் திரு மா.மதிவேந்தன் - ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் - ஆதிதிராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன். திருமதி என்.கயல்விழி செல்வராஜ் - மனிதவள மேலாண்மை மற்றும் முன்னாள் படைவீரர்கள் நலன் ஆதாரம்:தமிழ்நாடு அரசு