மூன்றாம் பாலினம் ஆண், பெண் இருபாலரைத் தவிர மூன்றாம் பாலினமான திருநங்கை, திருநம்பி, கோத்தி உள்ளிட்டோரை மூன்றாம் பாலினத்தோர் என அரசு வகைப்படுத்தியுள்ளது. சமுதாயத்தில் கவனிப்பாரற்று பல்வேறு பிரச்சனைகளை மூன்றாம் பாலினர் எதிர்கொள்கின்றனர். மூன்றாம் பாலினரின் நலனில் அக்கறை கொண்டு, அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மூன்றாம் பாலினர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கிடவும், கல்வி உதவித் தொகை, சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை அளித்து சமுதாயத்தில் அவர்களுக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்தவும் தமிழ்நாடு அரசு 2008-2009 ஆம் ஆண்டு மூன்றாம் பாலினருக்கு ஒரு நல வாரியத்தை அமைத்துள்ளது. வாரியத்தின் அமைப்பு மூன்றாம் பாலினரின் நலனைக் காப்பதற்கும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் மாண்புமிகு சமூக நலத் துறை அமைச்சர் அவர்களின் தலைமையில்