இறைச்சிப் பொருள்கள் தொழிலுக்கான மாதிரித் திட்டம் கோழி இறைச்சி உருண்டைகள் மற்றும் சமோசா விற்பனை மூலம் கிடைக்கும் இலாபத்தைப் பற்றி தற்போது பார்ப்போம். இறைச்சி உற்பத்தி பொருள்களில் அனுமானங்கள், முதலீடு, நிரந்தரச் செலவுகள், மாறுபடும் செலவீனங்கள், வரவு, பணத்தின் கால மதிப்பு, இலாபச் செலவு விகிதம் போன்றவை முக்கியப் பங்காற்றுகின்றன. அனுமானங்கள் கால்நடை பொருளாதாரமானது சில அனுமானங்களின்படி கணக்கிடப்படுகிறது. கால்நடைகளின் வகை, தரம், அவற்றின் விலை, உற்பத்தித் திறன், சந்தை விற்பனை வழி முறைகள், தேவைப்படும் வேலையாட்கள், அவர்களின் கூலி, தீவன அளவு, அவற்றின் விலை, காப்பீடு போன்ற விவரங்கள் அனுமானங்களில் குறிப்பிடப்படும். நிரந்தர முதலீடு கோழி இறைச்சி உருண்டைகள் மற்றும் சமோசா உற்பத்தியில், கட்டிடங்கள், உபகரணங்கள் போன்றவை நிரந்தர முதலீடாகும். இவை ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்குப் பலன் தரும். அத்தகைய செலவுகள் நிரந்தர முதலீடாகும். செலவுகள் கால்நடைப் பண்ணை வளர்ப்பில் இரு வகையான செலவுகள் இருக்கும். ஒன்று மாறாச் செலவுகள் மற்றும் மாறுபடும் செலவீனங்கள் ஆகும். மாறாச் செலவுகள் இத்தகைய செலவுகளின் அளவானது உற்பத்தியைப் பொறுத்து மாறுவதில்லை. இவை நிலையான செலவுகளாகும். நிரந்தர முதலீட்டின் மீதான வட்டி, உபகரணங்கள் மற்றும் கட்டிடத்தின் மீதான தேய்மானம், காப்பீட்டுத் தொகை போன்றவை மாறாச் செலவுகளில் அடங்கும். மாறுபடும் செலவுகள் தீவனச் செலவுகள், மருத்துவச் செலவுகள், போக்குவரத்து, மின்சாரச் செலவுகள் போன்றவை மாறுபடும் செலவுகளாகும். இவற்றின் அளவு உற்பத்தியைப் பொறுத்து மாறுபடும். வரவு கோழி இறைச்சி உருண்டைகள் மற்றும் சமோசா விறபதன் மூலம் வருவாய் கிடைக்கும். நிகர இலாபம் வரவுக்கும் செலவுக்கும் இடைப்பட்ட வேறுபாடே நிகர இலாபமாகும். கோழி இறைச்சி பந்துகள் தயாரிப்பு மாதிரித் திட்டம் கோழி இறைச்சி பந்துகள் உற்பத்திக்கான நிரந்தர முதலீடு மற்றும் செலவுகள், அதற்குத் தேவையான இடவசதி, வாடகை, உபகரணங்கள் மற்றும் அவற்றின் விலையைப் பொறுத்து மாறுபடும். இங்கே நாம் கிராமிய மட்டத்தில் செய்வதாகக் கருதப்படுவதால் இறைச்சி பதப்படுத்துவதற்குச் சொந்த இடத்தை பயன்படுத்தலாம். அவர்களுக்கு நிரந்தர முதலீடு என்பது இறைச்சி குறு அரிவாள் மற்றும் ஒருதன்மையாக்கி வாங்குவது மட்டுமே. தொழில்நுட்ப அனுமானம் இறைச்சி குறு அரிவாள் மற்றும் ஒருதன்மையாக்கிக்கு ஆரம்ப முதலீடு - ரூ. 50,000 பையகப்படுத்தும் இயந்திரத்தின் விலை – ரூ. 4,000 பாத்திரங்களின் விலை – ரூ. 1000 உற்பத்தி ஒரு வருடத்திற்கு 310 நாட்கள் மட்டுமே, மீதம் 55 நாள்கள் விடுமுறை நாள்கள் எலும்பில்லாத கோழிக்கறி 1 கிலோவின் விலை மற்றும் காய்கறி எண்ணெய், மசாலாத் தூள், கருப்பு மிளகு, இஞ்சி மற்றும் பூண்டு விழுது ஆகியவற்றின் விலை – ரு. 350 பணியாளர்கள் செலவு, ஒரு நாளுக்கு ரூ. 250 எனக் கணக்கிடப்படுகிறது இதர செலவுகள் 1 கிலோ இறைச்சி மற்றும் பிற வேறுபடும் உள்ளீடுகளுக்கு 10% எனக் கருதப்படுகிறது. தினசரி 5 கிலோ கோழி இறைச்சியில் இருந்து இறைச்சி உருண்டைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன எனக் கருதப்படுகிறது. ஒரு பந்து 10 கிராம் பேட்டர் என்ற வீதம் ஒரு கிலோ கோழி இறைச்சியிலிருந்து 135 பந்துகள் தயாரிக்கப்படுகின்றன எனக் கருதப்படுகிறது. தயாரித்து முடிக்கப்பட்ட இறைச்சிப் பந்து, ஒரு பந்து ரூ. 4 என்ற வீதம் விற்பனை செய்யப்படுகிறது. வ.எண் நிரந்தர முதலீடுகள் ருபாயில் 1 குறு அரிவாள் மற்றும் ஒருதன்மையாக்கியின் விலை 50,000 2 பேக்கேஜிங் இயந்திரத்தின் விலை 4,000 3 பாத்திரங்களின் விலை 1,000