முன்னுரை தற்போது மாற்றம் பெற்றுள்ள வாழ்க்கை முறையில், குடும்ப நபர்கள் ஒவ்வொருவரும் தற்போது நடைமுறையில் உள்ள உடைகளையே அதிகமாக அவர்களது அலமாரியில் கொண்டிருப்பர். அழகாக உடை அணிவதையும், அவர்களது வாழ்க்கை தரம் பற்றி மற்றவர்களுக்கு அறிவிக்கும் விதத்திலும் நடந்து கொள்வர். இன்றைய அவசரமான வாழ்க்கை முறையில், துணிகளை தைத்து வாங்குவது என்பது மிகவும் சிரமமானது. நாம் கடைகளுக்கு சென்று துணியை வாங்கி, தையல்காரரை நாடி துணியை தைப்பதற்கு கொடுத்து, ஆடை தயாராகும் வரை காத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த பிரச்சனையை தவிர்க்க, ஆயத்த ஆடையை வாங்குவதற்கு மாற்றுமுறை ஒன்று உள்ளது. அனைத்து வைபவங்களுக்கும் குடும்ப நபர்கள் பிரசித்தி பெற்ற பெரிய கடைகளில் ஆயத்த ஆடைகள் வாங்குவதை விரும்புவர். அனைத்து வயதினருக்கும் அதிக அளவில் ஆயத்த ஆடைகள் கிடைக்கின்றன. ஆடைகளுடன் கூடிய துணைபொருட்களும், ஆடைகளுக்கு பொருத்தமானவைகளும் கிடைக்கின்றன. ஆயத்த ஆடைகள் பல்வேறு வயதினருக்கு, வேறுபட்ட நிறக்கலவைகளில், தற்போதைய ஸ்டைலில், பிரிண்ட்டில், பல்வேறு வைபவங்களுக்கு ஏற்றாற்போல், சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப கடைகளில் உடனடியாக கிடைக்கக்கூடிய ஆடைகளே. ஆயத்த ஆடைகள் என்று அழைக்கப்படுகின்றன. ஆயத்த ஆடைகளின் விற்பனையாளர்கள் கீழே வருபவர்கள் • முன்னணி கொள்முதல் விற்பனையாளர்கள் • தரமான ஷோரூம்களில் *சில்லரை வியாபாரக் கடைகளில் *சிறு அளவிலான பொட்டிக்குகள் • வீடு வீடாகச் சென்று விற்பவர்கள் பொதுவான உடல் அளவைகளில் ஆயத்த ஆடைகள் கீழ்வருபவர்களுக்கு கிடைக்கும் *பிறந்த குழந்தை *சிறு குழந்தைகள் *முன்பள்ளி சிறார்கள் *பள்ளி செல்பவர்கள் • வளரிளம் பருவத்தினர் • வயது முதிர்ந்தோர் ஒவ்வொரு வயதினருக்கும் கிடைக்கக்கூடிய ஆடைகளின் அளவுகள் கீழ்வருவன • சிறிய அளவு . * பெரிய அளவு . * மிகப்பெரிய அளவு சிறுவர், சிறுமியர், ஆடவர், பெண்கள் ஆகியோருக்கு பல்வேறு பயன்பாட்டிற்கு ஆயத்த ஆடைகள் கீழ்வருமாறு வகைப்படுத்தப்பட்டு கடைகளில் கிடைக்கின்றன. *சாதாரணமான அணியக்கூடியன .*எப்போதாவது அணியக்கூடியன *சிறப்பு விழாக்கால நாட்களுக்கு அணியக்கூடியன் *உறங்கும்போது அணியக்கூடியன இவை தவிர, ஆயத்த ஆடைகள் சிறப்பான நிகழ்வுகளுக்கு என்றும் கீழ்வருவனவற்றுக்கு கிடைக்கின்றன. * விளையாட்டிற்கான உடை * நீச்சல் உடை * கராத்தே உடை * நடன உடை * நடைபயிற்சி மற்றும் ஜாகிங் உடை * மணப்பெண்ணிற்கான உடை ஆயத்த ஆடைகளை தேர்வு செய்வதன் காரணங்கள் *சமீபத்திய ஸ்டைல்கள் *தற்போதைய நாகரீக பாங்கு *பிடித்தமான டிசைன்கள் *பிரமிக்க வைக்கும் பிரிண்டுகள் *பல்வேறு வண்ணங்கள் *அதிகப்படியான வண்ணக்கலவை *நேர்த்தியான அழகான நெசவு மாதிரிகள் *கலையுணர்வு மிக்க நிறைவுகள் *பல்வேறு புறத்தோற்ற தன்மை *மாற்றி அமைத்து அணியக்கூடிய ஆடைகள் *மிக்ஸ், மாட்ச் ஸ்டைல்கள் அனைத்து வயதினருக்கும் ஏற்ற பருவகால ஆடைகள் அவை. * குளிர்கால உடைகள் • வெயிற்கால உடைகள் * அனைத்து பருவகாலத்திற்கும் ஏற்ற உடைகள் அனைத்து வருமான பிரிவினருக்கும் ஆயத்த ஆடைகள் கிடைக்கின்றன. ஒருவரது தேவைக்கேற்ற விலைகளில் ஆடைகள் உள்ளன. குறைவான விலையில் ஒருவர் உடை வாங்க வேண்டும் என எண்ணியிருந்தால், அவரது பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்கலாம். தரக்குறியீடுயிட்பட்ட உடைகளை வாங்க நினைத்தால், சந்தேகமின்றி அதன் தரத்திற்கு ஏற்ப அதில் குறிப்பிட்டுள்ள விலையினை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆயத்த ஆடைகள் வாங்கும்போது மனதில் கொள்ள வேண்டிய கருத்துக்கள் ஒருவர் ஆயத்த ஆடை வாங்குவதற்கு முன்பாக, என்ன வாங்க வேண்டும்? எங்கு வாங்க வேண்டும்? எவ்வளவு வாங்க வேண்டும் மற்றும் அதற்கான பட்ஜெட் ஒதுக்கீடு பற்றி நன்கு சிந்தித்த பின் வாங்க முற்பட வேண்டும். கீழ்வரும் குறிப்புகளை மனதில் வைத்துக்கொண்டு ஆயத்த ஆடைகளை வாங்க வேண்டும். *நம்பகமான கடை *நிகழ்ச்சிக்கு ஏற்றவாறு *பட்ஜெட்டிற்குள் *சரியான அளவு / பொருத்தம் *வண்ணம் *பிடித்தமான டிசைன் *தற்போதைய ஸ்டைலில் பிரிண்ட் *சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப *போதுமான வேலைப்பாடு *நிறம் நீடித்து இருக்க வேண்டும் *ஏற்றுக்கொள்ளக்கூடிய ஸ்டைல் *சலவை செய்து பராமரித்தலுக்கான அறிவுரைகள் / *குறிப்புச்சீட்டு தகவல்கள் *திருப்தி அளிக்கக்கூடியது. தற்போது அனைத்து கடைகளிலும் விற்பனையாளர்கள் விற்பனையை அதிகரிக்க யுக்திகளை கடைபிடிக்கிறார்கள். அவை பின்வருமாறு • தள்ளுபடி *அன்பளிப்பு பரிசுகள் அளித்தல் / பரிசு கூப்பன்கள் *இன்று வாங்கி, நாளை பணத்தினை கட்டலாம். *ஒன்று வாங்கினால், இரண்டோ , மூன்றோ எடுத்துக் கொள்ளலாம். *ஒரு குறிப்பிட்ட தொகையை விட அதிகமாக வாங்கும் போது போனஸ் பாயிண்ட்கள். இன்றைய நிலையில் மக்கள் தொகையில் அநேகமானோர், விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கும் மீடியாக்களின் கவர்ச்சிகரமான விளம்பரங்களால் கவர்ந்திழுக்கப்பட்டு, பொருட்களை வாங்கத் தூண்டப்படுகிறார்கள். ஒருவர் ஆயத்த ஆடைகள் வாங்கும்போது தனிப்பட்டவரின் பண்புகளை கவனத்தில் கொள்ள வேண்டும். *வயது *தொழில் *பொருளாதார நிலை *நடைமுறை வாழ்க்கை *ஆளுமை *சுயகொள்கை (Self concept) ஒருவரை துணிவாங்குவதற்கு எண்ண வைக்கும் உளவியல் காரணிகள் பின்வருவன • தூண்டுதல் • உள்ளுணர்வு * மனப்பான்மை * பகுத்தறிதல் உற்பத்தியாளர் மற்றும் சிறுவணிகர்கள் தவறு செய்ய இடம் கொடுக்காமல், ஒவ்வொருவரும் பின்வரும் குறிப்புகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விழிப்புணர்வோடு நோக்க வேண்டியவை * குறைந்த அளவில் கொடுத்தல் அல்லது தரமற்றதை கொடுத்தல் * விலையில் ஏமாற்றுதல் • குறைபாடுள்ள பொருட்களை விற்பனை செய்தல் * தவறான வழிகாட்டுதல் மற்றும் நிறைவுபெறாத குறிப்புச்சீட்டுகள் மற்றும் குறிப்புகளை கொண்டுள்ளவற்றை சரியாக கவனிக்க வேண்டும். ஆயத்த ஆடைகளினால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் நன்மைகள் • உடனடியாக கிடைக்கிறது. * ஸ்டைலில் மற்றும் துணியில் பல்வேறு வகைகள் *வெவ்வேறு தட்பவெப்பநிலை மற்றும் நிகழ்ச்சிகளுக்கு தேவை ஏற்படும்போது ஆடைகளை வாங்கிக் கொள்ளலாம். *தையல்காரர் மற்றும் வீட்டில் தைக்கப்படும் ஆடைகளை உருவாக்கும் நேரம் சேமிக்கப்படுகிறது. * தற்போது நடைமுறையில் உள்ள நாகரீகப்பாங்கு பற்றி தெரிந்து கொள்ளலாம். * தரக்குறியீடு உள்ள பொருட்களை, இருப்பதை அறிந்து வாங்கிக் கொள்ளலாம். * குறிப்புச்சீட்டு அறிவுரைகள் கொண்ட எளிய பராமரிப்பு ஆடைகள். * பொருத்தமாக உள்ளதா என்று ஆடையை வாங்குபவர் அணிந்து பார்க்க முடிகிறது. குறைபாடுகள் • சரியான அளவினை அறிந்திருத்தல் அவசியம் * வாங்குபவரின் ரசனையை வெளிப்படுத்திவிடும். * சில சமயங்களில் சரியாக பொருந்தும் ஆடைகள் கிடைப்பதில்லை. • தையற்காரரிடம் தைத்தல் மற்றும் வீட்டில் தைக்கப்படும் உடையை விட விலை அதிகமானது. * தரமற்ற தையலினால் ஒரு சில ஆயத்த ஆடைகள் நீடித்து உழைப்பதில்லை. தையற்காரர் உருவாக்கிய ஆடைகள் ஒருவரது தேவையை சார்ந்து தையற்காரரின் உதவியுடன் உருவாக்கப்பட்ட ஆடைகள் தையல்காரர் உருவாக்கிய ஆடைகள் என்று அழைக்கப்படுகின்றன. தையல் கலைஞர் என்பவர் ஆடை தயாரித்தல், பழுதுகளை சரிசெய்தல், வடிவத்தை சரியாக்குதல் ஆகியவற்றை தொழிலாக செய்பவர் ஆவார். ஒரு திறமைமிக்க தையல் கலைஞர் சாதாரண துணியிலிருந்து எளிமையான ஆடையை வடிவமைப்பார். அவர் பயிற்சியின் மூலம் மிகுந்த அழகுடனும், தரமிக்கதாகவும் ஆடைகளை உருவாக்குவதில் வல்லவராகிவிடுவார். ஒரு தையல்கலைஞர் நன்கு முன்னேறி திறமையாளராக ஆன பின் எல்லா சூழ்நிலைக்கும் ஏற்ற மிக அழகான வடிவமைப்பை கொண்ட ஆடைகள் மற்றும் அணிகலன்களை வடிவமைக்கிறார். தையல் தொழிலாளி என்பவர் தங்கள் வீட்டிலேயோ அல்லது தொழிலுக்கான அறையிலோ முழு நேரமோ அல்லது பகுதி நேரமோ வேலை செய்யலாம். தையல் தொழிலின் வகைகள் தையல் தொழில் வளர்ச்சியடைந்தது போலவே பல்வேறு தையல் வகைகளும் தோன்றியுள்ளன. அவை * உள்ளூர் தையற்தொழில் * தூரதேச தையற்தொழில் * பயணிக்கும் தையற்தொழில் உள்ளூர் தையற்தொழில் உள்ளூர் தையற்தொழில் என்ற பெயருக்கேற்ப இவ்வகையினர் உள்ளூரில் உள்ள மக்களின் ஆடை தேவைகளை பூர்த்தி செய்பவர். இவ்வகை தையற்காரர் தனது தொழில் திறமைக்கு ஏற்ப அளவெடுத்தல், தைத்தல் மற்றும் மாறுதல்களை செய்து உடல்வடிவம் மற்றும் அளவுகளுக்கேற்றவாறு ஆடைகளை தயாரிக்கிறார்கள். உள்ளூர் தையற்கலைஞர்களுக்கு ஷோரூம்கள் உள்ளூரில் இருக்கும். இவ்வகை மிகவும் பாரம்பரியம் மிக்க தொழிற் வகையாகும். தூரதேச தையற்தொழில் உள்ளூர் தையற் கலைஞரை விடுத்து வெளியிடத்தில் உள்ள தையற்கலைஞரிடம் ஆடை வடிவமைப்பதற்காக ஒப்பந்தம் ஏற்படுத்துவது. இதன் மூலம் ஆடை வடிவமைப்பதற்கான தொகை குறைவாக அமையும். இவ்வகையான தொழில் நடைமுறை தற்போது உலக அளவில் e வணிக வெப்சைட்டுகள் மூலம் நடைபெறுகின்றன. உள்ளூர் தையற்காரரிடம் உள்ள வசதிபோல் அல்லாது இவ்வகையில் வாடிக்கையாளரே தங்களது அளவுகள் மற்றும் உடைதேர்வு ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். இவற்றில் ஏதேனும் மாறுதல்கள் தேவைப்படின் உடையை அனுப்பி சரிசெய்து கொள்ள வேண்டும். தற்காலத்தில் தூரதேச தையற்தொழில் வினைஞருக்கு ஆன் லைன் ஓர் சிறப்பான வழியாக அமைந்துள்ளது. பயணிக்கும் தையற்தொழில் கலைஞர் பயணிக்கும் தையற்தொழில் என்பது உள்ளூர் தையல் தொழில் மற்றும் தூரதேச தையல் தொழிலின் கலவையாக கருதப்படுகிறது. பொதுவாக இவ்வகை தையற்தொழில் குறிப்பிட்ட இடம் என்று இல்லாமல் பல்வேறு இடங்களுக்கு சென்று தமது வாடிக்கையாளருக்கான சேவையை நிறைவு செய்கின்றனர். மிகவும் குறைவான வெகுமானத்தை பெற்றுக்கொண்டு வாடிக்கையாளரின் சந்திப்பின் பொழுது அவர் தம் அங்க அளவுகளை எடுத்துக்கொண்டு தம்மிடம் உள்ள துணி மாதிரிகளை காண்பித்து ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்கின்றனர். வாடிக்யைாளரின் ஒப்பந்தப்படி ஆடையை தயாரித்த பின் அதனை தபால் அல்லது கூரியர் மூலமாக அனுப்பி வைக்கின்றனர். இம்முறையின் நன்மை என்னவெனில் ஓர் தையற்கலைஞர் அவர்தம் வாடிக்கையாளரை நேரில் சந்தித்து அவரின் தேவையை குறைந்த கூலியைப் பெற்றுக்கொண்டு நிறைவாக செய்ய முடிகிறது. ஆடைகளை வீட்டிலோ அல்லது தையற்கலைஞர் உதவியுடனோ சிறப்பாக உருவாக்க முடியும். தையல்கலைஞர் உருவாக்கியதை அல்லது வீட்டில் தைக்கப்பட்ட ஆடைகளை குடும்ப நபர்கள் விரும்பாவிட்டால் ஆயத்த ஆடைகளை கடைகளில் இருந்து தேவைப்படும் நேரம் விருப்பத்திற்கு ஏற்ப வாங்கிக்கொள்ளலாம். தையல்கலைஞர் தயாரித்த ஆடைகளினால் ஏற்படும் நன்மை, தீமைகள் நன்மைகள் *சிக்கனமானது *உடலமைப்பு பொருத்தமாக அமைந்திருக்கும். *ஒப்பற்ற ஸ்டைலில் தேர்ந்தெடுக்க உதவுகிறது. *வீட்டில் அமைக்கப்பட்ட ஆடையை விட நேரம் குறைவாகவே தேவைப்படும். குறைபாடுகள் * தையல் கலைஞரைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலை. * சரியாக உடலுக்குப் பொருந்தாமை. • ஆயத்த ஆடைகளை விட தைப்பதற்கு அதிக நேரம் எடுக்கிறது. * தரமிக்க நிறைவை ஆடைகளில் பெற முடிவதில்லை. • *ஆயத்த ஆடைகளுடன் ஒப்பிடும்போது ஸ்டைல்கள் மிக குறைவு. * விலை மிக்கது. வீட்டில் உருவாக்கப்படும் ஆடைகள் வீட்டில் ஆடைகள் மிகச் சிறப்பாக உருவாக்கப்படுகிறது. நமக்கு மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் தைப்பவரது திறன்கள் மற்றும் ஆர்வத்தை வெளிப்படுத்துவதே வீட்டில் உருவாக்கப்படும் ஆடைகள் ஆகும். குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் மிகுந்த ஆர்வத்துடனும், திறமை மிக்கவர்களாக ஆடை உருவாக்கத்தில் ஈடுபடும் பொழுது ஆடைகளை வீட்டிலேயே வெற்றிகரமாக தயாரிக்க முடியும். நன்மைகள் * சிக்கனமானது • சிறப்பு மிக்க திறமை மற்றும் ஈடுபாடு தேவைப்படுகிறது. • பிறரைச் சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை. * ஒப்பற்ற ஸ்டைலை உருவாக்க உதவும். * அதிக நேரத்தை எடுத்துக் கொண்டாலும் ஆடை பொருந்துவதில் திருப்தியையும் செளகர்யத்தையும் ஏற்படுத்துகிறது. * தையல் இயந்திரங்கள் மற்றும் நிறைவு செய்யும் இயந்திரங்கள் ஆகியவற்றின் இருப்பைக் கொண்டு தரமான ஆடைகளை உருவாக்க முடியும். * புதிய டிசைன்களை உருவாக்கத் தூண்டுதல் * போதுமானத் திறமை மற்றும் திறன்கள் ஆடை உருவாக்கத்திற்கு தேவைப்படுகிறது. * பல முறையான உருவாக்கத்தினால் ஏற்படும் பயிற்சியின் மூலம் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ள முடிகிறது. * கணினிச் சார்ந்த டிசைன் உருவாக்கத்தினால் செய்முறை எளிமையாகிவிட்டது. * தற்போதைய ஃபேசன் மற்றும் ஸ்டைல்களை அறியமுடிகிறது. குறைபாடுகள் *அதிக நேரம் தேவைப்படுகிறது. *சிறப்பு மிக்கத் திறமை மற்றும் திறன் தேவைப்படுகிறது. *ஆயத்த ஆடைகளுக்கு இணையான மேன்மை கிடைப்பது கடினம் *துணிகளின் வகைகள் மற்றும் ஸ்டைல்கள் பற்றி போதிய அறிவு இருந்தால் மட்டுமே சிறப்பாகச் செயல்பட முடியும். ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்