முன்னுரை ஒரு ஆடையை வடிவமைப்பதற்கு அல்லது அலங்கரிப்பதற்கு, தேவையான அம்சங்களை அறிந்திருத்தல் அவசியம் ஆகும். ஒரு ஆடையை பார்ப்பதற்கு ஈர்ப்பு மிகுந்ததாக வடிவமைக்க நமக்கு அரிதாக உள்ள வளங்களான நேரம், முயற்சி மற்றும் பணம் அல்லது வடிவமைத்தல் மற்றும் அலங்கரித்தலை பயன்படுத்த வேண்டும். கோடுகள், வடிவங்கள், வண்ணங்கள் மற்றும் நூல் நயங்களை நேர்த்தியாக கையாண்டு உருவாக்கும் வடிவத்தையே டிசைன் என்று வரையறுக்கிறோம். வடிவமைத்தல் என்பது தெளிவற்ற நிலையில் இருந்து உயர்ந்த உன்னத திருப்தி அளிக்கும் வகையில் ஒழுங்கு முறையான தனிப்பட்ட குணம் அல்லது தனித்து நிற்கும் தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும். ஒரு வடிவமைப்பு கவனமாக அறிவு பூர்வமாக கலை மூலப் பொருட்களை பயன்படுத்தி தனிப்பட்ட நபரின் எண்ணத்தை எடுத்துக் கூறும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆடை வடிவமைப்பில் அடிப்படையாக இரு முக்கிய பிரிவுகள் உள்ளன. இரு வடிவமைப்புகளும் பிரிக்க முடியாத பிரிவுகளாகும். ஆடை வடிவமைப்பில் இவை இரண்டும் வடிவமைப்பை ஏற்படுத்தும் காரணிகளாகும். உருவ வடிவமைப்பு அலங்கார வடிவமைப்பு உருவ வடிவமைப்பு ஒரு ஆடை வடிவமைப்புக்கு தேவையான அனைத்தும் உருவ வடிவமைப்பில் அடங்கி உள்ளது. ஆடையின் உருவ வடிவத்தோடு, ஆடையின் பகுதிகளான டார்ட்கள், மடிப்புகள், டக்குகள் மற்றும் தொடர்புடைய அம்சங்கள் இணைப்பது உருவ வடிவமைப்பில் அடங்கும். ஆடையின் எல்லைக் கோட்டுப் பகுதியில் சற்று மாறுபட்ட வண்ண மேற்புறத் தையல் செய்வது உருவ வடிவமைப்பிற்கு மெருகூட்டி அலங்கார தரத்தினை கூடுதலாக்கிக் காட்டும். ஆடை உருவாக்கத்தில் உருவ வடிவமைப்பு மிகவும் முக்கியமானது. ஏனெனில் வடிவமைப்பிற்கு இது ஒரு அடிப்படை அங்கமாகும். அலங்கார வடிவமைப்பு இந்த வடிவமைப்புகளில் அடிப்படையான உருவடிவமைப்புகள் தேவைப்படும். உருவடிவங்கள் மீது வடிவமைத்து வரையப்பட்டது தொங்கவிடப்படுகிறது. அது அதிகமாக கத்தரித்து சீர் செய்யப்பட்டு, அச்சு வேலைபாடுகள் மிகுந்து, சித்திரத் தையல், பொத்தான்கள், போக்களில் இழையோட்டம் போன்றவைகள் செய்யப்பட்டு இருக்கும். இந்த வடிவமைப்புகளில், துணி, நவீனம் மற்றும் நிறங்களின் சேர்க்கை விவரிக்கப்படுவதால் விரும்பிய வடிவமைப்பை எளிதாக தேர்ந்தெடுக்க முடிகிறது. ஒருவரது அழகு மற்றும் தோற்றத்தை அதிகரித்து காட்டுவதற்கு கலையின் மூலப் பொருட்கள் மற்றும் அடிப்படைக் கொள்கைகளை தகுந்தவாறு பயன்படுத்த வேண்டும். வடிவமைப்பின் மூலக்கூறுகள் (Elements of Design) ஒருவர் கலை மற்றும் வடிவமைப்பின் அடிப்படை மூலக் கூறுகளை முழுவதுமாக தெரிந்திருத்தால் அழகுணர்ச்சியுடன் கூடிய ஆடைகளை வடிவமைத்து உருவாக்க முடியும். அழகான ஆடைகளை உருவாக்க வடிவமைப்பின் மூலக் கூறுகளை தேர்ந்தெடுத்து, ஒருங்கிணைக்க ஒரு சில முக்கியமான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஒரு வடிவமைப்பை உருவாக்குவதில் வடிவமைப்பு மூலப் பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. வடிவமைப்பின் மூலப் பொருட்களும், கோட்பாடுகளும் இன்றைய நடைமுறை நாகரீகத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கும் தன்மை பெற்று இருக்க வேண்டும். கோடுகள், வடிவங்கள், நிறங்கள், நயம் அல்லது புறத்தோற்ற தன்மை (texture) ஆகியவை நல்ல தோற்றமளிக்கும் வகையில் அமைத்து இருப்பதே வடிவமைப்பு என வரையறுக்கப்பட்டுள்ளது. கலை மூலப் பொருட்கள் எந்த விகிதத்தில் எவ்வாறு சேர்க்கப்பட்டுள்ளன என்பதே வடிவமைப்பின் கோட்பாடுகள் ஆகும். ஆகவே, மூலப் பொருட்கள் என்பன கலைக்கு தேவையான பொருட்களை சரியாக இணைத்து அமைப்பதாகும். பின் வருவன கலையின் பல வித மூல பொருட்களாகும்: கோடு உருவம் மற்றும் வடிவம் வண்ணம் புறத்தோற்றத் தன்மை கலை மொழியில் மேற்கண்ட மூலப் பொருட்கள் “பிளாஸ்டிக்குகள்” என கருதப்படுகின்றன. ஏனென்றால் இம்மூலக் கூறுகளை திறமையாகக் கையாண்டால் அல்லது அமைத்தால் ஒரு வடிவமைப்பாளரால் அவர் நினைத்த பொருளை கச்சிதமாக உருவாக்க முடியும். கோடு கோடு பல்வேறு தோற்றங்களான திசை, கனம், பருமன், கூர்மையான ஓரங்கள் மற்றும் நீளத்தை உள்ளடக்கியுள்ளது. பார்வைக்கு அழகாக புலப்படும் வகையில் நீள, அகல அளவுகளை கோடு கொடுக்கிறது. கோடுகளை ஒன்று சேர்த்து சரியான இடைவெளி கொடுத்தால் பல உருவங்களையும், வடிவங்களையும் வரையறுக்கலாம். கோடுகள் உள்ள ஆடைகள் பார்ப்பவர்களது கண்களுக்கு அழகாக புலப்பட்டு மிளிரச் செய்யும் தன்மை வாய்ந்தது. ஆடை வடிவமைப்பில் கோடுகள் உண்மையான அளவைவிட பருமனாகவோ அல்லது ஒல்லியாகவோ தோற்றமளிக்குமாறு அமைக்கப்படுகிறது. கோடுகள் பல்வேறு பணிகளை செய்கின்றன. மனோநிலையை ஏற்படுத்துகிறது வரையறுத்தல் மற்றும் உருவம் கொடுத்தல் திசைகளை காட்டுதல் கண்களுக்கு முன்னோடியாக உள்ளன வடிவமைப்பில் முக்கியத்துவத்தை ஏற்படுத்துகிறது மாயையை ஏற்படுத்துதல் நீள அகல அளவுகளை காட்டுதல் வெற்று இடங்களை உள்ளடக்குதல் கோடுகளின் வகைகள் கோடுகளில் இரு வகைகள் உண்டு நேர்க்கோடுகள் மற்றும் வளைவு கோடுகள். நேர்க்கோடுகள் நான்கு திசைகளிலும் செல்லலாம். செங்குத்து கோடுகள், சமதளக் கோடுகள், மூலைவிட்ட கோடுகள் அல்லது வளைந்து செல்லும் கோடுகள் ஆகும். வளைவு கோடுகள் மிதமிஞ்சி ஒரு வட்டத்தையே உருவாக்கும் கோடுகளாகவும் அல்லது நுண்ணிய (அ) மெல்லிய வளைவுகளைக் கொண்டு கிட்டத்தட்ட ஒரு நேர்க்கோடு போன்றும் இருக்கலாம். நேர்க்கோடுகள் மனித உடம்பின் இயற்கையான வளைவு, நெளிவுகளுக்கு எதிர்மறையானவை நேர்க்கோடுகள். நேர்க்கோடுகள் கம்பீரமாகவும், உறுதியுள்ளதாகவும் தோற்றமளிக்கும் தன்மை வாய்ந்தவை. துணி உருவடிமைப்பில் புறத்தோற்றத் தன்மையில் மென்மையான தேர்ந்தெடுக்கப்பட்ட துணிகளில் உருவாவதற்கு நேர்க்கோடுகள் பயன்படுத்துதலினால் ஆகும். உதாரணமாக, ஜெர்ஸி போன்ற மென்மையான துணியை பயன்படுத்தும் போது, நேர்க்கோடுகள் உடல் வளைவுகளில் படிந்து கட்டுப்பட்டு வளைந்து காணப்படும். ஆனால் விரைப்பான துணிகளான ஆர்கண்டி அல்லது டஃபேட்டா போன்றவை நேர்க்கோடுகளை நேர்த்தியாக வைத்திருக்கும். இவ்வகை துணிகள் விரைப்பு தன்மையால் மனித உடலில் இருந்து விலகியே இருக்கும். டார்ட்கள், இணைப்புகள் மற்றும் அலங்கரித்தல் மூலமாக ஆடைகளினுள் கோடுகள் உருவாக்கப்படுகின்றது. ஒவ்வொரு வகை கோடும் ஒரு விசேஷ தாக்கத்தை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்ததாகும். நேர்க்கோடுகள் மற்றும் வடிவங்கள் சக்தி மற்றும் பலத்தினையும், ஆண்மை குணத்தையும் குறிக்கும். வளைந்த கோடுகள் என்பன இயற்கையான கோடுகள், இக்கோடுகள் ஆடைகளுக்கு அழகைக் கொடுத்து பெண்மை குணத்தையும் ஏற்படுத்தும். ஆடை வடிவமைப்பாளர்களுக்கு கோடுகள் தான் பலமான ஆயுதமாக விளங்குகிறது. கோடுகள் உயரத்தையும், அகலத்தையும் ஒருவரின் தேவைக்கும் தோற்றத்திற்கும் ஏற்றவாறு அமைத்து ஆடைகளை உருவாக்க பயன்படுகிறது. நேர்க்கோட்டின் ஒவ்வொரு திசையும் ஒளியியல் விளைவை அல்லது மாயையை (செங்குத்து, மட்டக்கோடு, சாய்ந்த கோடு, வளைந்த கோடு) ஒரு தனி நபரின் குறிப்பிட்ட ஆடை வடிவமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தீர்மானிக்கலாம். ஆடை வடிவமைப்பில் கோடுகளை ஒருங்கிணைத்து அமைப்பதன் மூலம் உயரமாக, குள்ளமாக, பருமனாக அல்லது மெலிவாக தோன்றச் செய்ய முடியும். கோடுகள் ஒரு ஆடையில் பயன்படுத்தும் விதம் ஒருவரது மனப்பான்மையை வெளிப்படுத்தும். கோடு மற்றும் ஒளியியல் விளைவு ஏற்படும்போது சிறிய இடுப்பு பெரிதாக தோன்றவோ, தோள்பட்டை அகலமானதாகவோ அல்லது குறுகலாகவோ, இடுப்புப் பகுதி சிறிதாகவோ அல்லது பெரியதாகவோ தோன்றலாம். கோடுகள் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்புடைய பிற காரணிகளாவன: டிசைனை அணிந்திருப்பவரது உடல் வடிவம் துணியின் வண்ணம் பார்வையை ஈர்த்து ஆவலை தூண்டும் கோடுகளின் மாறுபட்ட விகிதாசரம் கோடுகளால் பக்கத்தில் உருவான வடிவம் அல்லது இடைவெளிகளை ஒப்பீடு செய்தல் துணி தொங்கவிடப்படல், கை நெசவு, அச்சுகள் மற்றும் புறத்தோற்ற தன்மை முன் நிபந்தனையின்படி பார்ப்பவர்கள் எதிர்பார்த்தது போல் தாக்கம் ஏற்படுத்தும் செங்குத்துக் கோடுகள் செங்குத்துக் கோடுகளின் எண்ணிக்கையை கூட்டி வித்தியாசமான நிறங்களை, ஆடையின் நடுவிலோ அல்லது மையப் பகுதியிலோ சேர்க்கும் போது (படம் அ) ஆடையின் வடிவமைப்பிற்கு உயரத்தை கூட்டியது போன்ற எண்ணத்தை உருவாக்கும். செங்குத்துக் கோடுகள் குள்ளமான தோற்றம் உடையவர்களை, உயரமான தோற்றமுடையவராக தோன்ற செய்யும் திறன் பெற்றுள்ளது (படம் ஆ) இளவரசிக்கான ஸ்டைலில் உள்ள ஆடையும் இது போன்ற விளைவை ஏற்படுத்தும். செங்குத்துக் கோடுகள் இடம் பெறும் ஆடைகளை பார்ப்பவர் கண்கள் அதன் நீளத்தை அளவீடு செய்யும். கணிசமான செங்குத்துக் கோடுகளை கொண்ட பாவாடைகள் / கால் சட்டைகள், சட்டைகள் அதன் அகலத்தில் இருக்கும் இடவெளியை குறைத்துக் காட்டி பார்வையில் இடம் பெறச் செய்யும் ஆற்றல் பெற்றது. எந்தவித உருவமும் இல்லாமல் தெளிவாக இருக்கும் ஒரு பாவாடை பார்ப்பதற்கு மிகவும் அகலமாக காட்சியளிக்கும். ஆனால் அதில் செங்குத்துக் கோடுகள் இடம் பெற்றால், அது சற்று அகலம் குறைந்ததாக தோன்றும். மட்டக் கோடுகள் இந்தக் கோடுகள் ஆடைகளின் அகலத்தை அதிகப்படுத்தி, உயரத்தை குறைக்கும் திறன் கொண்டவை. உதாரணம், வித்தியாச நிறமுடைய அகலமான இடுப்புப் பட்டி (belt) அணிந்த ஆடையை இரு பகுதியாக பிரித்து மனிதனின் உயரத்தை குறைத்துக் காட்டும். எனினும், இடுப்புப் பட்டியானது இடுப்பின் அளவை குறைத்து காட்டும், ஆடையின் நிறத்தை ஒத்த (படம் இ) இடுப்புப் பட்டியானது அணிந்துள்ளவரின் உயரத்தையும் ஆடையின் உயரத்தையும் குறைத்துக் காட்டாது. மூலை விட்ட கோடுகள் இந்த கோடுகள் உடை உடுப்பவரின் உயரத்தைக் கூட்டி காட்டவோ, குறைத்துக் காட்டவோ செய்யும் ஆற்றலை பெற்று உள்ளது. துடையில்லாத நீளமான மூலைவிட்ட கோடுகள் கிட்டத்தட்ட செங்குத்து கோடுகளுக்கு சமமான கோடுகள் ஆகும். இவை மிக நீளமான, தெளிவான கோடுகள் ஆகும். மூலை விட்ட கோடுகள், செங்குத்து அல்லது மட்டக் கோடுகளோடு இணைந்து இருந்தால் வடிவம் சிறப்பாக இருக்கும். மூலை விட்டக் கோடுகள் மட்டுமே ஆடையில் முழுவதுமாக பயன்படுத்தப்பட்டிருந்தால் அதன் விளைவு நன்றாக இருக்காது. (படம் ஈ) வளைந்த கோடுகள் இந்தக் கோடுகள் மிகவும் விசித்திரமானவை மற்றும் இயற்கையில் ஆழ்ந்த யோசனையுடன், பெண்மைதனம் நிறைந்ததாகவும், அழகானதாகவும் கருதப்படுகிறது. மூலை விட்ட திசையில் உள்ள வளைந்த கோடுகள் மிகவும் அழகாக இருக்கும். மென்மையான மடிப்புகளைக் கொண்டு தொங்கவிடப்பட்ட உடையிலும், சுருக்கங்களுடன் கூடிய கழுத்துப்பட்டையிலும் வளைந்த கோடுகளை பார்க்கலாம். வளைவு கோடுகளானது அளிப்பவரின் உடல் அமைப்பை சார்ந்தே இருக்கும். வளைகோடு முழு வட்ட வடிவமாக உருவாக்கப்படும் போது, அந்தக் கோடு செயல்பாடு மிக்கதாக தோன்றும். ஒரு கட்டுப்படுத்தப்பட்ட வளைவு அருளோடு, தொடர்ச்சியாக மற்றும் நல்லியல்புடன் தோன்றும் நேர்க்கோடுகள் உடல் வடிவத்தினை துணியின் புறத்தோற்ற தன்மை மூலமாக வெளிபடுத்துவது போலவே வளைவு கோடுகளும் செயல்படுகின்றன. அதிகமான அளவில் வளைவுகளை வெளிப்படுத்தும். உதாரணம், ஒரு ஆடையில் ஒரு பகுதியில் சுருக்கங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தால் ஆடையின் மென்மையான பகுதிகளுக்கு பார்வை செலுத்தப்பட்ட பின்னரே சுருக்கம் உள்ள பகுதியில் படிகிறது. மணிக்கட்டில் சுருக்கங்கள் வைக்கப்பட்டிருந்தால் பார்வை அப்பகுதியால் ஈர்க்கப்படும். ஆடையில் அதிக மடிப்புகள் உள்ள பகுதி அனைவரது கவனத்தையும் ஈர்க்கும். வளைவு கோடுகள் ஒல்லியான நபரை சற்று பருமனாக தோன்றச் செய்யும். வளைந்து வளைந்து செல்லும் கோடுகள் இது மூலை விட்ட கோடுகளின் தொடர் இணைப்பு ஆகும். கண்களின் பார்வை திசையில் உடனடி மாற்றத்தையும், மறுபடி, மறுபடி வரம்பின்றி செல்வதால் பார்வையில் தள்ளாட்டத்தையும் ஏற்படுத்தும். இந்த வகை கோடுகள் துணிகளில் பெரிதாக இடம் பெறும். கண் செயல்பாடுகள் காரணமாக, இந்த கோடுகள் அமையும் இடங்களில் சற்று பெரிய தோற்றத்தை உருவாக்கி விடுகிறது. பார்ப்பதற்கு மாயத்தோற்றத்தை உருவாக்கும் நேர்க்கோடுகளின் ஒருங்கிணைப்பு (படம் 1 - 5) படம்