அறிமுகம் ஒரு ஆடை முறையாக பாதுகாக்கப்படும் போது நீண்ட காலத்திற்கு உழைக்கும் தன்மை கொண்டது. பயன்படுத்தப்படும் காலத்தில் கண்களுக்கு நல்லதொரு தோற்றத்தை அளிக்கும். பாதுகாத்தல் என்பது 3 மூலப்பொருட்களை உடையது. சுத்தம் செய்தல், புத்துணர்வு ஏற்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல். சுத்தம் செய்தல் என்பது பொதுவாக பாதுகாத்தல் மற்றும் புத்துணர்வு ஏற்படுத்துதலை விட தொழில்நுட்ப முறை மற்றும் உட்படுத்தப்பட்ட செயல்பாடுகளை கொண்டது. சலவை செய்தல் மற்றும் உலர் சலவை என்பவை இரு முக்கிய சுத்தம் செய்யும் முறைகளாகும். சலவை செய்தல் என்பது கைகள் அல்லது இயந்திரத்தால் செய்யப்படுகிறது. இரண்டு செயல்பாடுகளிலும் தண்ணீர் வெப்பநிலை, பயன்படுத்தப்படும் சலவைத் தூளின் தன்மை, கரைகளை போக்க பயன்படுத்தப்படுகின்ற தூள், துணிகளை தண்ணீரில் ஊற வைக்கும் நேரம் மற்றும் துவைக்கும் நேரம், துணிகளில் உள்ள ஈரம் அகற்றும் முறை மற்றும் தேவையான இஸ்திரி அழுத்தம் கொடுக்கும் முறை ஆகியவைகளில் வேறுபாடுகள் உள்ளன. சலவை செய்தல் சலவை செய்தல் என்பது ஒரு வகையான சுத்தப்படுத்தும் முறையாகும். தண்ணீர் மற்றும் ஒரு வகை சோப்பு / சோப்பு தூள் பயன்படுத்தப்படுகிறது. சுத்தம், சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றின் இன்றியமையாத பகுதியாக சலவை செய்தல் விளங்குகிறது. சலவை செய்தலின் கொள்கைகள் மற்றும் பயன்படுத்துதல் வீட்டில் சலவை செய்தல் என்பது ஒரு கலை. அதற்கு சரியான நுட்பத்தை கற்றுக் கொள்ள பொறுமை மற்றும் பயிற்சி தேவை. துணிகளை சலவை செய்வதில் இரண்டு செயல்பாடுகள் உள்ளன. துணியில் உள்ள அழுக்கை அகற்றும் செயல்பாடு மற்றும் சலவைக்குப் பின் புதிய துணி போல சுத்தமான தோற்றத்தை பெறுவதற்கான செயல்பாடு. துணிகளில் அழுக்காக படிவன பின் வருமாறு பிரிக்கப்பட்டுள்ளன: லேசான அழுக்கு துணி மேல் படிந்திருப்பது. நிரந்தரமான அழுக்கு எண்ணெய் பசையால் (grease) துணியில் ஒட்டி இருப்பது. ஊற வைத்தல், பிரஷ் கொண்டு தேய்த்தல் மற்றும் அழுக்கை நீக்குதல் போன்ற இயக்கங்கள் மூலம் லேசான அழுக்கு நீக்கப்படுகிறது. உட்கிரகித்தல் அல்லது எமல்சிபிக்கேட்டர் (emulsificator) சலவை செய்தல் மற்றும் உலர் சலவை மூலமாக நிரந்தரமான அழுக்கு அகற்றப்படுகிறது. அழுக்கை அகற்றுவதில் சோப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அழுக்கை அகற்றுவதில் சோப்பு நீர் துணியினுள் எந்த அளவிற்கு ஊடுருவி செல்கிறது என்பதை பொறுத்து அமைகிறது. ஆகவே சுத்தப்படுத்தும் செயல்பாட்டில் இன்றியமையாத குறிப்பு என்னவெனில் அழுக்கு அகற்றப்படுவது எண்ணெய் பசையை கரைக்கக்கூடிய அல்லது உறிஞ்சக்கூடிய தன்மையுடன் அழுக்கை அகற்றுவதற்கு உறுதியான அதிக அழுத்தத்தை பயன்படுத்த வேண்டும். துணிகளில் அழுக்கை அகற்ற பல்வேறு முறைகளில் அழுத்தும் விசை பயன்படுத்தப்படுகிறது சலவை செய்யும் முறை செயல்பாடு பயன் சலவையில் உராய்தலை பயன்படுத்துதல் கைகளால் உராய்வை ஏற்படுத்துதல் துணியை ஊற வைத்த நீரில் இருந்து பிழிந்து எடுக்கவும். அதிக அழுக்கு உள்ள பகுதிகளில் சோப்பு போடவும். துணியின் ஒரு பகுதியை வைத்து அழுக்கு உள்ள பகுதியில் நன்றாக அழுக்கு நீங்கும் வரை தேய்க்க வேண்டும். வெதுவெதுப்பான நீரில் சோப்பு நீங்குமாறு அலசி எடுக்க வேண்டும். அதிகமாக அழுக்குள்ள பருத்தி மற்றும் லினன் துணிகளுக்கு ஏற்றது. தேய்க்கும் பிரஷ் கொண்டு உராய்தலை பயன்படுத்துதல் ஊற வைத்த துணியை நீரில் இருந்து வெளியே எடுக்கவும். சமமான தரை பகுதியில் பரப்பி, அழுத்தி சோப்பை கொண்டு தேய்க்கவும். துணியின் அனைத்து பகுதிகளிலும் நன்றாக தேய்க்கவும். வெதுவெதுப்பான நீரில் சோப்பு நீங்குமாறு அலசி எடுக்கவும். சொர சொரப்பான உறுதியான அதிக அழுக்குள்ள துணிகளுக்கு ஏற்றது. லேசான அழுத்த விசை செலுத்தி சலவை செய்தல் தேய்த்து, கசக்கி பிழிந்து சலவை செய்தல் நுரையுடன் கூடிய (100-110°F) வெப்ப நிலையில் துணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு தண்ணீரை தயார்படுத்தவும். சோப்பு நீரில் அழுக்கு துணியை தேய்த்து கசக்கி பிழியவும். அதிக அழுக்கு உள்ள பகுதியை உள்ளங்கையில் வைத்து அதிகமான சோப்பு கொண்டு கசக்கி, அழுக்கு நீங்குமாறு செய்ய வேண்டும். சோப்பு அகலும் வரை நன்கு அலச வேண்டும். உராய்தல் பயன்படுத்த முடியாத மென்மையான துணிகளான கம்பளி, ரேயான் மற்றும் வண்ணத் துணிகளுக்கு இந்த சலவை முறை ஏற்றது. கையால் சலவை செய்வதற்கு பொதுவான செய்முறை அநேகமான துணிகள் இன்று இயந்திரத்தின் மூலமாக அல்லது உலர் சலவை மூலமாக சுத்தம் செய்யப்பட்டாலும், கைகளால் சலவை செய்வது என்பது முக்கியமானதாக கருதப்பட்டு செய்யப்படுகிறது. எளிய சலவைகளுக்கு மட்டும் இன்றி குறிப்பிட்ட சில துணிகளான பட்டு, பின்னப்பட்ட கம்பளி உடைகள், கலப்பில்லாத துணிகள் மற்றும் வண்ணசாயத்தின் நிலைப்பு தன்மை பற்றி அறிந்திராத பொழுது கைகளால் சலவை செய்யப்படுகிறது. கைகளால் சலவை செய்யும் போது பின்பற்ற வேண்டிய குறிப்புகள்: அதிகமாக அழுக்காவதற்கு முன் சலவை செய்ய வேண்டும். துணிகளில் புள்ளிகள், கிழிசல்கள் மற்றும் ஓட்டைகள் உள்ளனவா என முழுவதுமாக சோதித்துப் பார்க்க வேண்டும். கிழிந்த பகுதி அல்லது ஓட்டைகளை தைத்து சரி செய்யவும். புள்ளிகளை நூல் பயன்படுத்தி குறித்து வைக்கவும். அப்போது தான் சலவை செய்யும் போது கவனமாக செய்ய முடியும். சலவை செய்ய முடியாத பொருட்கள் ஏதாவது உடையில் இருந்தால் அதனை அகற்ற வேண்டும். மென்மையான துணிகளுக்கு அதிக காரத் தன்மை இல்லாத சோப்பினை பயன்படுத்த வேண்டும். சலவை இயந்திரத்தை பயன்படுத்தி சலவை செய்தல் இன்று பெரும்பாலான சலவைகள் தானியங்கி சலவை இயந்திரம் மூலமாக சலவை செய்யப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் தானியங்கி சலவை இயந்திரத்தை தேர்வு செய்யும் பொழுது கீழ் வரும் கருத்துக்களை மனதில் கொள்ள வேண்டும். குடும்பத்தின் அளவை பொறுத்து சலவைத் துணிகளின் அளவும் இருக்கும். இயந்திரத்தை வீட்டில் வைப்பதற்கான இடம். குறைந்தது இரு வேறுபட்ட வேகங்களில் வெவ்வேறு துணிகளுக்கு பயன்படுத்துவதற்கு. தண்ணீருக்கு மூன்று வெப்பநிலைகள். நீரை நிரப்ப நேரக் கட்டுபாட்டை விட அழுத்தக் கட்டுபாடு முக்கியம். குறைந்த அளவு துணிகளை சலவை செய்யக் கூடியதாக இருக்க வேண்டும். மின்சார பயன்பாடு மிதமாக இருக்க வேண்டும். தானியங்கி சலவை இயந்திரம் பயன்படுத்தப்படும் போது கவனமாக பின்பற்றப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைகள் தண்ணீர் நிரப்பப் பயன்படும் டயூப் பழுதாகாமல் இருக்க, சலவை இயந்திரம் பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் போது தண்ணீர் வரும் குழாயை நிறுத்தி விட வேண்டும். துணிகளின் பாக்கெட்டுகளில் உள்ள பொருட்களை சலவைக்கு முன் எடுத்து விட வேண்டும். சலவை இயந்திரம் உபயோகத்தில் இருக்கும் போது கைகளை இயந்திரத்திற்குள் போடக் கூடாது. சலவை இயந்திரத்தில் மிக அதிக அளவு துணிகளை சலவைக்குப் போடக் கூடாது. துணிகளின் அளவை சமமாகப் பிரித்து சலவை இயந்திரத்தில் போட வேண்டும். இயந்திரம் குலுங்கினாலோ, அதிர்ந்தாலோ அல்லது சத்தம் வருமாறு இருந்தாலோ, உடனடியாக நிறுத்தி விடவும். பின் வருவன பொதுவான செய்முறைகள் சலவை இயந்திரத்தை பயன்படுத்துவதற்கு முன்பாக தயாரிப்பாளர்களின் குறிப்புகளை நன்கு படித்து அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். நிரப்பப்பட வேண்டிய அளவு வரை சலவை இயந்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீரை நிரப்ப வேண்டும். சலவைத் தூள் அல்லது திரவ சோப்பை சேர்க்க வேண்டும். அதிகமான அழுக்கு உள்ள ஆடைகளை சலவை இயந்திரத்தில் போடுவதற்கு முன் சோப்பை பயன்படுத்தி தேய்த்து விடவும். துணிகளை வெள்ளை நிறமுடையவை மற்றும் மிகவும் மென்மையானவை என வகைப்படுத்தவும். சலவை இயந்திரத்தின் கொள்ளளவிற்கு ஏற்றவாறு துணிகளை நிரப்ப வேண்டும். சலவை இயந்திரத்தின் சுழற்சி, வெப்ப நிலை, வெதுவெதுப்பான நீரா அல்லது சூடான நீரா, நேரம், சலவைக்கு இயந்திரம் இயக்கும் பொத்தான் ஆகியவற்றை சரியாக அமைத்துக் கொள்ள வேண்டும். சலவை முடிந்தவுடன் ஆடைகளை இயந்திரத்தில் இருந்து வெளியே எடுத்துவிடவும். சூரிய ஒளியிலோ அல்லது நிழலிலோ துணிகளை உலர்த்த வேண்டும். துணிகளை மிருதுவாக்குதல் துணிகளை மென்மையாக்கி, பெரிதாக்கச் செய்து, கசங்காகாமல் வைத்து இஸ்திரி இடுதலை சுலபமாக்குவது துணிகளை மிருதுவாக்குவதன் குறிக்கோள் ஆகும். மனிதன் தயாரித்த துணிகளில் பயன்படுத்தும் போது மின்சாரம் சிக்கனப்படுத்தப்படுகிறது. பல்வேறு மிருதுவாக்குவன் சந்தையில் இருந்தாலும், அநேகமானவை திரவ நிலையில் கிடைக்கின்றன. துணியை அலசும் இறுதி நீரில் கலக்க வேண்டும் என்பது ஒரு வகை. ஆனால் மற்றொரு வகையில் துணி சோப்புடன் நீரில் மிருதுவாக்குவனவற்றை சேர்க்கலாம். இரண்டாம் வகையில், குறிப்புகளை கவனத்துடன் படித்து பின்பற்ற வேண்டும். ஏனெனில் மிருதுவாக்குவன. சோப்புடன் வினை புரிந்து கரையாக வீழ்படிவத்தை ஏற்படுத்தி, துணிகளில் படிந்து அகற்றுவதற்கு சிரமத்தை ஏற்படுத்தி விடும். வெளுப்பாக்குதல் வெளுப்பாக்குதல் என்பது ஒரு சிக்கலான செயல்பாடு ஆகும். நிறத்தை நீக்குதல் அல்லது துணிகளில் உள்ள வண்ணம் மங்கி இருந்தால் அந்த துணியினை வெண்மையாக்குதல் போன்ற செயல்பாடுகள் வெளுப்பாக்குதல் மூலம் நடக்கின்றன. சலவை செய்தலில், கறைகளை சாதாரண சலவையில் நீக்க முடியாத நிலையில் வெளுப்பாக்குதல் மூலம் நீக்கப்படுகிறது. வெளுப்பாக்குதலை கவனமாக அனைத்து ரக துணிகளிலும் செய்ய முடியும். துணிகளில் ஏற்படக் கூடிய பாதிப்பை தவிர்க்க சரியான செலவுத் தொகை மற்றும் வெளுப்பானின் வீரியம் பற்றி தெரிந்து இருப்பது இன்றியமையாததாகும். வெளுப்பான்களின் வகைகள் வெளுப்பான்களின் செயல்பாட்டுபடி அவை மூன்று வகைப்படும். ஆக்ஸிகரன வெளுப்பான்கள் குறைக்கும் வெளுப்பான்கள் ஆப்டிகல் வெளுப்பான்கள் ஆக்ஸிகரண வெளுப்பான்கள் இவற்றில் பிராண வாயு முக்கியமான அங்கமாக விளங்கி, துணியில் உள்ள கறையுடன் சேரும் போது வெளியிடப்படுகிறது. கறையுடன் ஆக்ஸிகரண வெளுப்பான் சேரும் போது நிறமற்ற ரசாயனக் கூட்டுப் பொருளை உருவாக்கும். ஆக்ஸிகரண வெளுப்பான்களுள் பின் வருவனவற்றை குறிப்பிடலாம்: சூரிய ஒளியுடன் ஈரப்பதம், காற்று, புல் சோடியம் ஹைபோகுளோரைட் சோடியம் பெர்போரேட் ஹைட்ரஜன் பெராக்ஸைடு பொட்டாசியம் பெர்மாங்கனேட் சூரிய ஒளியுடன் ஈரப்பதம், காற்று, புல் இது பழமையானது, சுலபமானது, மலிவானது. மேலும் பருத்தி மற்றும் லினன் ஆகியவற்றை வெளுக்க பயன்படுத்தப்படும் வெளுப்பானாகும். இவை நிறத்தை நீக்குவதற்கு பயன்படுத்தப்படும் போது பிராண வாயுவுடன் சேர்ந்து நிறமற்றதாக்கி விடுகிறது. காற்று மற்றும் புல்லில் இருந்து சூரிய ஒளி மூலம் பெறப்படும் பிராண வாயுவும், ஈரப்பதத்துடன் சூரிய ஒளி சேரும் போது பெறப்படும் பிராண வாயுவும் சிறந்த வெளுப்பான்கள் ஆகும். வெளுப்புக்கு உட்படுத்த உள்ள பொருள் குறிப்பாக கறைப் பகுதி ஈரமாக்கப்பட்டு, சூரிய ஒளி படுமாறு புல் அல்லது சிறு செடிகள் மீது கறைகள் மறையும் வரை பரப்பப்படுகிறது. பின்னர் துணியை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். ஏனெனில் நீண்ட நேரத்திற்கு சூரிய ஒளி படுமாறு வைத்திருந்தால் துணிகள் பாழாகி விடும். ஆக்ஸிகரண ரசாயனத்துடன் வெளுப்பாக்கும் முன், உலோக பொத்தான்கள் அல்லது வேறு பிற உலோக பொருட்கள் இருந்தால் எடுத்து விடவும். ஏனெனில், உலோகங்கள் ஆக்ஸிகரணத்தால் துணிகளில் கரை ஏற்படுத்திவிடும். சோடியம் ஹைபோகுளோரைட் அல்லது ஜேவல் நீர் தேவையான பொருட்கள் 1 பவுண்டு சலவை சோடா (480 gms)