வாயில் வைக்கும் நிக்கோடின் பவுச்கள் (Oral Nicotine Pouches) தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம், மக்களின் பொது நலன் கருதி, வாயில் வைக்கும் நிக்கோடின் பவுச்களை (Oral Nicotine Pouches) வாங்குதல், விற்பனை செய்தல் மற்றும் உட்கொள்வதற்கு குறித்து எச்சரித்து, இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இவ்வகை வாயில் வைக்கும் நிக்கோடின் பவுச்கள் (Oral Nicotine Pouches) நம் நாட்டில் அங்கீகரிக்கப்படவில்லை (Unapproved), மேலும் அவற்றின் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தரம் நிரூபிக்கப்படவில்லை. காரணம் மற்றும் விபரம் அமேசான் (Amazon), வேர்ல்ட் ஆஃப் நிக்கோடின் (World of Nicotine), தோலக்கியா டொபாகோ (Dholakia Tobacco) மற்றும் பைடேஸ் (Buydaze) போன்ற இணையதளங்கள் வாயிலாக ஸ்வாக் ஸ்லிம் ஒயிட் மிண்டோ நிக்கோடின் பவுச் (Swag Slim White Minto Nicotine Pouch), டபிள்யூஜி ஒயிட் கோல்ட் ஸ்ட்ராங் மாசிவ் மிண்ட் நிக்கோடின் பவுச் (WG White Gold Strong Massive Mint Nicotine Pouch) டேஸ் டிராபிகல் மிஸ்ட் நிக்கோடின் பவுச் (Daze Tropical Mist Nicotine Pouches) ஐஸி மிண்ட் நிக்கோடின் பவுச் மற்றும் வைட் மேங்கோ ஸ்ட்ராங் ஆல் வைட் (Icey Mint Nicotine Pouch and Whyte Mango Strong-All White Snus) போன்ற வாயில் வைக்கும் நிக்கோடின் பவுச்களை (Oral Nicotine Pouches) சட்டவிரோதமாக விற்பனை செய்வது தொடர்பாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறையால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு, M/s. RR Impex, New Delhi - 110003 M/s. Daze India, Uttar Pradesh - 201301 ( Buydaze) M/s. Arthian Organic (OPC) Private Limited, New Delhi 110009 (அவர்களின் A World of Nicotine) M/s Dholakia Tobacco Pvt. Ltd, (DTPL), Gujarat-364240 ( Dholakia Tobacco) உரிய உரிமங்கள் இல்லாமல் வாயில் வைக்கும் நிக்கோடின் பவுச்களை (Oral Nicotine Pouches) விற்றதற்காகவும், மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940 மற்றும் அதன் கீழுள்ள விதிகளை மீறி தயாரிக்கப்பட்ட/இறக்குமதி செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மருந்தை (unapproved drug) விற்றதற்காகவும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், உரிய உரிமங்கள் இல்லாமல், வாயில் வைக்கும் நிக்கோடின் பவுச்கள் (Oral Nicotine Pouches) எனப்படும் மருந்தை காட்சிப்படுத்தியதற்காக, விற்பனைக்கு வழங்கியதற்காக மற்றும் விற்பனை செய்ததற்காகவும், மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940 மற்றும் அதன் கீழுள்ள விதிகளை மீறி தயாரிக்கப்பட்ட/இறக்குமதி செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மருந்தை (unapproved drug) காட்சிப்படுத்தியதற்காக, விற்பனைக்கு வழங்கியதற்காக மற்றும் விற்பனை செய்ததற்காகவும் M/s. Amazon Seller Services Private Limited, Bengaluru 560055, இணையதள விற்பனை நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எச்சரிக்கை புகைபிடிப்பதை நிறுத்துதல், குக்கா மற்றும் புகையிலை மெல்லுவதை நிறுத்துதல் அல்லது நிக்கோடினின் நிறுத்துதல் அறிகுறிகளுக்கு சிகிச்சையாக (aid for smoking cessation, gutka and tobacco chewing cessation or for treating withdrawal symptoms of Nicotine) இதுபோன்ற வாயில் வைக்கும் நிக்கோடின் பவுச்களை (Oral Nicotine Pouches) பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இத்தகைய நிக்கோடின் பவுச்களின் (Oral Nicotine Pouches) பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தரம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இந்த தயாரிப்புகள், வாயில் உறிஞ்சும்போது நிக்கோட்டினை (Nicotine) இரத்த ஓட்டத்தில் நேரடியாக கலக்கச்செய்கின்றன. மேலும் கட்டுப்பாடற்ற நிக்கோடின் (uncontrolled nicotine release) நுகர்வு மற்றும் அதிகபடியான நிக்கோடின் உட்கொள்ளல் மோசமான உடல்நலக் கேடுகளை ஏற்படுத்தக்கூடும். உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், இணையதள சந்தை நடத்துபவர்கள், விநியோகஸ்தர்கள், மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள், அங்கீகரிக்கப்படாத வாயில் வைக்கும் நிக்கோடின் பவுச்களை (Oral Nicotine Pouches), உற்பத்தி செய்தல், சேமித்து வைத்தால், விற்பனைக்கு காட்சிப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தலை (ஆன்லைன் போர்டல் உட்பட) தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இது தொடர்பான ஏதேனும் விளக்கங்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் புகார்களுக்கு தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்தை, 9445865400 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது பொது நலம் கருதி வெளியிடப்படுகிறது. இணைமருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரி ஆதாரம்: தமிழ்நாடு செய்தி வெளியீடு எண் 423 (18.02.2026)