17 வயதிற்கு மேற்பட்டவர்கள் தற்போது முன்னதாகவே வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்க முடியும். முன்னதாக இருந்தது போல், 18 வயதை அடைபவர்கள் ஜனவரி முதல் தேதியை கணக்கில் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. அதன்படி, ஆண்டுதோறும் ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய தினங்களை தகுதியாக கருத்தில் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான வசதிகளை ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்த பின் அவர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய நாட்களில் 18 வயதை அடைபவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க முடியும். வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் திருத்தங்களை மேற்கொள்ள கோருவதற்கான புதிய விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 1, 2022 முதல் நடைமுறையில் உள்ளது. தற்போது உள்ள வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு 6B என்ற விண்ணப்பம் பூர்த்தி செய்தல் வேண்டும். எனினும், ஆதார் எண்ணை அளிக்காதவர்களின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், எந்தவொரு பதிவும் ரத்து செய்யப்படாது என்றும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்களின் தகவல்கள், பொது வெளியில் வெளியிடவேண்டிய அவசியம் இருந்தால், ஆதார் விவரங்கள் வெளியிடப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்