தேசிய சாலைப் பாதுகாப்பு மாதமானது சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் ஜனவரி 1 முதல் ஜனவரி 31, 2025 வரை அனுசரிக்கப்படுகிறது. குறிக்கோள்கள் சாலையைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் விபத்தில்லாப் பயணத்தை உறுதி செய்வது தேசிய சாலைப் பாதுகாப்பு மாத (ஜனவரி 1 முதல் ஜனவரி 31 வரை) விழாவின் முக்கிய நோக்கமாகும். பல்வேறு நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் அனைத்து பங்குதாரர்களையும் பொதுமக்களையும் ஒன்றிணைப்பதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. கொண்டாட்டங்கள் 2026 தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்படுவதன் ஒரு பகுதியாக, பங்குதாரர்கள் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள், பயிற்சிகள், பட்டறை, கருத்தரங்கு, கண் பரிசோதனை முகாம்கள் மற்றும் ஓட்டுநர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான ஆலோசனை நிகழ்ச்சிகள் போன்றவற்றை சாலை பாதுகாப்பு மாதத்தில் ஏற்பாடு செய்கின்றனர். உண்மையான உணர்வுடன் இந்த நிகழ்வுகள் பங்குதாரர்களிடையே பாதுகாப்பான சாலைகளுக்கான காரணத்தை பரப்புகின்றன. இந்த முயற்சிகள் நாட்டில் சாலை விபத்து இறப்புகள் மற்றும் காயங்களைக் குறைக்கும் இலக்கை அடையப் பெரிதும் உதவும். சாலை பாதுகாப்பு விதிகள் பொதுமக்கள் விபத்தினை தவிர்க்கும் பொருட்டு சாலை பாதுகாப்பு, சாலை விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் தலைகவசம் அணிந்து வாகனத்தை இயக்க வேண்டும். நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிய வேண்டும். பாதசாரிகள் கடக்கும் இடத்தில் வாகனத்தின் வேகத்தை குறைக்க வேண்டும். சாலைக் குறியீடுகளையும் விதிகளையும் மதித்தால் விபத்துகளை தடுத்திட முடியும். வாகனத்தை பயன்படுத்தும் போது கை பேசியை பயன்படுத்தக்கூடாது. அதேப்போல அபாயகரமாக வாகனத்தை இயக்க கூடாது. குறிப்பாக மது அருந்தி வாகத்தை ஓட்டக்கூடாது. தேசிய நெடுஞ்சாலைகளில் தவறான திசையில் மற்றும் எதிர் திசையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் சாலை விதிகளை கடைபிடித்து விபத்தில்லா பயணத்தை மேற்கொள்ள வேண்டும் ஆதாரம்: சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம்