தர மதிப்பீடு அங்கீகாரத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜூன் 09 அன்று உலக தர மதிப்பீடு அங்கீகார தினம் (World Accreditation Day - WAD) கொண்டாடப்படுகிறது. இந்த உலகளாவிய முயற்சியானது சர்வதேச ஆய்வுக் கூட அங்கீகார கழகம் (ILAC) மற்றும் சர்வதேச அங்கீகார அமைப்பு (IAF) ஆகியவற்றால் நிறுவப்பட்டது. 2026 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் “புதுமை, நம்பிக்கை மற்றும் நிலைத்தன்மை: அங்கீகாரத்தின் சக்தி" என்பது இந்த ஆண்டின் கருப்பொருள். உலக அங்கீகார தினம் 2026 புதுமைகளை செயல்படுத்துவதிலும், நம்பிக்கையை வளர்ப்பதிலும், நிலையான எதிர்காலத்தை ஆதரிப்பதிலும் அங்கீகாரம் வகிக்கும் முக்கிய பங்கைக் கொண்டாடுகிறது. தொழில்நுட்ப முன்னேற்றங்கள், சிக்கலான உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் மற்றும் வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக சவால்களால் வடிவமைக்கப்பட்ட இன்றைய வேகமாக மாறிவரும் உலகில், தயாரிப்புகள், சேவைகள் மற்றும் அமைப்புகள் மீதான நம்பிக்கை எப்போதும் காணாத வகையில் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. மூலம் : உலகளாவிய அங்கீகார ஒத்துழைப்பு நிறுவனம் (Global Accreditation Cooperation Incorporated (Global ACI) இந்தியாவில் கொண்டாட்டங்கள் இந்திய தர கவுன்சில் (QCI) இந்தியாவில் தேசிய தர மதிப்பீடு அங்கீகார பாதுகாப்பு அமைப்பாக உள்ளது. சர்வதேச ஆய்வுக் கூட அங்கீகார கழகம், சர்வதேச அங்கீகார அமைப்பு போன்ற உலகளாவிய அமைப்புகளுடன் இணைந்து, இந்திய தரக் கவுன்சில், தனது வாரியங்களான - பரிசோதனை மற்றும் மதிப்பாய்வு கூடங்களின் தேசிய அங்கீகார வாரியம் (என்ஏபிஎல்) மற்றும் சான்றளிப்பு அமைப்புகளுக்கான தேசிய அங்கீகார வாரியம் (NABCB) - மூலம், இந்தியாவின் தர மதிப்பீடு மற்றும் அங்கீகார உள்கட்டமைப்பை சர்வதேச அளவுகோல்களுடன் சீரமைக்கிறது. மேலும் விவரங்களுக்கு https://qcin.org/ ஐப் பார்வையிடவும்.