கூழானாலும் குளித்துக்குடி கந்தையானலும் கசக்கிக் கட்டு என்பது முதுமொழி. புறந்தூய்மை நீரால் அமையும் அகந்தூய்மை வாய்மையாற் காணப்படும் என்பது குறள் மொழி. இவ்வாறு தூய்மையை வலியுறுத்தி வந்துள்ள நம் பாரதத் திருநாட்டின் நிலை என்ன தெரியுமா? தெருக்கள் சாலைகள் என எங்கு பார்த்தாலும் குப்பைகள் கழிவுகள் திடக்கழிவுகள் சிதறிக் கிடக்கின்றன. ஆறு, ஏரி, குளம், குட்டை என எல்லா நீர் நிலைகளும் 75 சதவீதம் மாசடைந்துள்ளன். அண்மையில் பிணங்கள் கங்கையில் மிதந்ததை செய்தி வாயிலாகவும் பத்திரிக்கை வாயிலாகவும் நாம் அறிகிறோம். இவை நாம் ஒவ்வொருவரும் நேரில் காணும் காட்சிகள். இது ஒரு பக்கம் என்றால் திறந்த வெளியில் மலம் கழிப்பது தூய்மைக்கு பெரும் சவாலாக உள்ளது. ஐ.நா. அமைப்பு கூறுவது என்ன? இந்தியாவில் 28 சதவீதம் மக்களுக்கு மட்டும் தான் சுத்தமான கழிப்பறை வசதி உள்ளது. 65 சதவீதம் வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை. ௫௦ சதவீதம் மக்கள் திறந்த வெளியில் மலம் கழிக்கின்றனர். இந்தியாவை விட மிகவும் ஏழ்மை நாடான வங்கதேசத்தில் 3 சதவீதம் மக்களுக்கு மட்டுமே கழிப்பறை வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நகரப்புறங்களில் 25 சதவீதம் வீடுகளில் கழிப்பறை வசதி கிடையாது. கழிப்பறை வசதி இருந்தும் சுமார் 40 சதவீதம் பேர் அதைப் பயன்படுத்துவதில்லை என்பது முக்கியமான தகவல். கால்நடை மேம்பாட்டுத்திட்டம் சுகாதாரக் கேடுகள் வயிற்றுப் போக்கு, போலியோ, சரும நோய், சுவாச நோய், விசக் காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் பொது சுகாதாரத்திற்கு கூடுதலாக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதிக விலை கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை, குடிநீர் பஞ்சம், திடக்கழிவுகள் மண்ணில் கலந்து மண்நிலம் சீர்கேடு ஏற்படுகிறது. விளைச்சல் குறைந்து உணவு பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்திய அரசின் முயற்சிகள் மத்திய ஊரகச் சுகாதாரத் திட்டம் 1986, முழு சுகாதாரத் திட்டம், நிர்மல் கிராம பாதுகாப்புத் திட்டம், நிர்மல் பாரத் அபியான், ஸ்வச் பாரத் 2014 எனப் பல்வேறு மத்திய அரசுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. புதிய ஸ்வச் பாரத் 2014 திட்டத்தின் மூலம் வரும் 2019ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதிக்குள் காந்தியடிகளின் 150ஆவது பிறந்த தினத்திற்குள் தூய்மையான பாரதத்தை படைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்லா குடியிருப்புகளுக்கும் கிராம மக்களுக்கும் தண்ணீர் வசதி, கழிப்பிடவசதி, முறையான கழிவுநீர் அகற்றும் விழிப்புணர்வு உண்டாக்குதல், மனமாற்றம் ஏற்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மை கண்காணித்தல், கலைநிகழ்ச்சிகள், தொலைக்காட்சியில் தொடர்கள், கருத்து விவாதம் நடத்துதல் போன்றவற்றை மேற்கொள்ளலாம். “தூய்மைத்தூதர்” என்று பிரபலமானவர்கள் ஒவ்வொரு பகுதியிலும் நியமிக்கலாம். பள்ளிக் குழந்தைகள் கண்ணைக் கவரும் படங்களுடன் தூய்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல். சமய விழாக்கள், பண்டிகைகள் மற்றும் இதர விழாக்கள் கொண்டாடுவதில் சிறு மாற்றங்கள் கொண்டு வந்து குப்பைகளை குறைத்தல். சுதந்திரத்தை விட சுகாதாரம் தேவை என காந்தி கூறினார். சுதந்திரம் பேண தூய்மை பேணுவோம். அந்த பிரசார இயக்கத்தில் நாம் ஒவ்வொருவரும் இணைந்து தூய்மை இந்தியா உருவாகப் பாடுபடுவோம். ஆதாரம் : பௌமிதா பானு (தகவல் பகிர்வாளர்)