போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நலநிதிக்கான சிறப்பு இணையதளம் ராணுவ நடவடிக்கைகளின் போது காயமடைந்த அல்லது உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிப்பதற்காக அக்டோபர் 14, 2022 அன்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் ‘பாரத் கே வீர் இணையதளம்’ என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்திய குடிமக்கள், பெரு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் முதன்மையான அமைப்புகள் நேரடியாக ‘பாரத் கே வீர் இணையதளம்’ மூலம் காயமடைந்த அல்லது உயிரைத் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக நிதியுதவி அளிக்க முடியும். இணையதளம்: https://bharatkeveer.gov.in/home ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்