மறு நிர்ணயம் செய்யப்பட்ட ஆட்டோ ரிக்க்ஷா கட்டணம் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையில் 09.07.2026 அன்று ஆட்டோ ரிக்க்ஷா சங்கங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கூட்டமைப்புகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து ஆட்டோ ரிக்க்ஷா கட்டணம் மறுநிர்ணயம் செய்ய ஒரு அலுவலர் குழு அமைக்கப்பட்டது. ஆட்டோ ரிக்க்ஷா உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் சங்கங்கள், நுகர்வோர் அமைப்புகள் ஆகியோர்களின் கருத்துகள் மற்றும் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் குழு பரிந்துரைகள் வழங்கியது. அதனடிப்படையில் கீழ்கண்டவாறு ஆட்டோ ரிக்ஷா கட்டணம் மறு நிர்ணயம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆட்டோ ரிக்ஷா உரிமையாளர்கள் / ஓட்டுநர்கள் 6 மாத காலத்திற்குள் தங்களின் கட்டணமானியை புதிய கட்டணத்திற்கு ஏற்றவாறு மறுசீரமைத்துக் கொள்ள வேண்டும். அதுவரை போக்குவரத்துத் துறை இணைய தளத்தில் உள்ள கட்டண அட்டையை பதிவிறக்கம் செய்து, பொதுமக்கள் பார்வைக்காக வாகனத்தில் வைத்திருக்க வேண்டும். ஆட்டோ ரிக்க்ஷாவில் பார்வைக்கு வைத்துள்ள கட்டண அட்டையில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து கட்டண அட்டையின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். மேலும், போக்குவரத்துத் துறையின் https://tnsta.gov.in/ என்ற இணையதளத்தில் கட்டண அட்டையை பார்வையிடலாம். பொதுமக்கள் அதிக கட்டணம் குறித்த புகார் தெரிவிக்க வேண்டிய கட்டணமில்லா தொலைப்பேசி எண்: 1800 425 5430 போக்குவரத்து மற்றும் சாலைப்பாதுகாப்பு ஆணையர் வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 ஆதாரம்: செய்தி வெளியீடு எண்: 929 (28.10.2026)